சீன வேளாண் உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு
cri
கடந்த ஆண்டு, சீனாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, சுமார் 6350 கோடி அமெரிக்க டாலராகும். 2005ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது, 13 விழுக்காடு அதிகமாகும். ஏற்றுமதியை விட, இறக்குமதி, 67 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. எமது செய்தியாளர் இன்று சீன வேளாண் அமைச்சகத்திலிருந்து இதை தெரிவித்தார். புள்ளி விவரங்களின் படி, கடந்த ஆண்டு, சீன தானியங்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும் பெருமளவில் குறைந்துள்ளன. கால் நடை பொருட்களின் வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை, மேலும் அதிகரித்துள்ளது. வட அமெரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை, சீன வேளாண் உற்பத்திப் பொருட்களின் முக்கிய இறக்குமதிச் சந்தைகளாக திகழ்கின்றன.
|
|