
சீனாவின் நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் சுகாதாரச் சேவை முறைமையின் உருவாக்கத்தில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று சீனச் சுகாதார அமைச்சின் செய்தி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் Mao Qun An கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் பேசுகையில், 2006ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் வரை, சீனாவின் நகரங்களில் குடியிருப்பு பகுதி சுகாதாரச் சேவை அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை, 23 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றும், இது, 2005ஆம் ஆண்டின் இறுதியை விட 48 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். இனிமேல், நகர குடியிருப்பு பகுதியின் சுகாதாரச் சேவை அமைப்பு முறை உருவாக்கத்தை சீனா படிப்படியாக முன்னேற்றி, பொது மக்கள், அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையை அனுபவிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று Mao Qun An தெரிவித்தார். தற்போது, சீனாவில் 81 விழுக்காட்டு நகரங்களில் நகர குடியிருப்பு பகுதி சுகாதாரச் சேவை வழங்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
|