• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-12 16:31:00    
ஒன்றிணைந்த அணியாக வட கொரியாவும் தென் கொரியாவும்

cri
2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியாவும், தென் கொரியாவும் ஒன்றிணைந்த அணியாக கலந்துகொள்ளும் நோக்கில் இவ்வாரத்தில் கூட்டு ஆலோசனையை நடத்தவுள்ளதாக தென் கொரிய ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. வடகொரியா ஒலிம்பிக் கமிட்டி விடுத்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு வடகொரியாவின் கேசோங்கில் நடைபெறும் எனப்படுகிறது. முன்னதாக சீனாவின் சாங்சன் நகரில் ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வேளையில் இந்த இருதரப்பும் சந்திப்பதாக திட்டமிடப்பட்டது ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. திங்களன்று இந்த சந்திப்பு நடைபெறும் என்பதாக தென் கொரிய தரப்பு செய்தி ஒன்று கூறுகிறது. 2008 பெய்சிங் ஒலிம்பிக்கின் போது இரு நாடுகளும் ஒரே அணியாக ஒன்றிணைந்து கலந்துகொள்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்த இருதரப்பு சந்திப்பில் விவாதிக்கப்படும்.