• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-12 09:07:54    
மக்கள் வீடுகளின் பிரச்சினையைத் தீர்க்கும் சீனா

cri

இருப்பினும், தற்போதைய சீனாவில், சீரற்ற வீட்டு நுகர்வுப் போக்கு நிலவுகின்றது. பணக்காரர்கள் சிலர் தாங்கள் வசிப்பதற்குப் பெரிய மற்றும் சொகுசான வீடுகளைக் கட்டுப்பாடின்றி நாடிவரும் அதே வேளை, நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெறும் அதிகமான சாதாரண மக்கள், வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால் வீட்டை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது வருமானத்துக்கு ஏற்ற செலவினத்தைத் தாங்கும் திறனைப் பொருட்படுத்தாமல், கண் மூடித்தனமாக வீடு வாங்கியதால், வாழ்க்கைத் தரம் பெரிதும் குறைந்தது. இத்தகைய நிலைமையில், மூல வளத்தைச் சிக்கனப்படுத்தும் சீரான, நியாயமான நுகர்வு முறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று சூ சொயி கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது,


வீட்டுப் பரப்பளவு, பொது மூலவளத்தின் பங்கீட்டுடன் தொடர்புடையது. பணக்காரர்கள் கட்டுப்பாடின்றி பரப்பளவை விரிவாக்கக் கூடாது. ஏழைகளுக்கும் வீடு தேவை. நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளின் பரப்பளவு குறைவாக இருப்பதால் மொத்த வீட்டு விலையும் குறைவாக இருக்கும். நுகர்வோர், குறிப்பாக நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெறுவோர் வீடு வாங்குவதற்கு இது துணை புரியும் என்றார் அவர்.
தற்போது நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகள் மக்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுகின்றன என்பதைக் கள ஆய்வின் முடிவு காட்டியுள்ளது. பெய்சிங், shen zhen, tai yuan, shi jia zhuang உள்ளிட்ட பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் வீட்டை வாங்கத் திட்டமிட்ட குடும்பங்களில், 50 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் அல்லது சுமார் 50 விழுக்காட்டினர் 90 சதுர மீட்டர் அல்லது 90 சதுர மீட்டருக்குட்பட்ட பரப்பளவுடைய வீட்டை வாங்க விரும்புகின்றனர். ஆனால் தற்போது சீனாவில் வீட்டுச் சந்தையில் நடுத்தர மற்றும் சிறிய வீடுகள் வகிக்கும் விகிதம் குறைவாக உள்ளது. ஒரு புறம், நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெறுவோர், வீடு வாங்குவதற்குப் பணம் போதவில்லை. அல்லது வீட்டை வாங்குவதற்காக, இதர நுகர்வுச் செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மறு புறம், விலை அதிகமான பெரிய ரக வீடுகள், பணக்காரர்களின் தேவையை நிறைவு செய்துள்ளது தவிர மிஞ்சியுள்ளன.
பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று 2 அல்லது 3 ஆண்டுகளாகிவிட்ட yu qi-ping என்பவர், பெய்சிங்கிலுள்ள தகவல் தொழில் நுட்பத் தொழில் நிறுவனமொன்றில் பணி புரிகின்றார். தமது வருமானத்துக்கு ஏற்ற வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை என்று செய்தியாளரிடம் அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 

 
பெய்சிங் மாநகரில் பெரிய ரக வீடுகள் அதிக அளவில் உள்ளன. சிறிய ரக வீடு மிகவும் குறைவு. 2 அறைகளைக் கொண்ட வீட்டின் பரப்பளவு பொதுவாக 100 சதுர மீட்டரைத் தாண்டியுள்ளது. மேலும், பெய்சிங்கில் வீட்டு விலை அதிகரித்துவருகின்றது. நகர மையப் பகுதி மட்டுமல்ல, தொலைவிலுள்ள புற நகரிலும் கூட, ஒரு சதுர மீட்டர் விலை, ஏழாயிரம் அல்லது எட்டாயிரம் ரென்மின்பி யுவானாக அதிகரித்துள்ளது. என்னைப் போன்று திங்கள்தோறும் மூவாயிரம் அல்லது நான்காயிரம் வருமானம் பெறுவோர் வீடு வாங்க முடியவில்லை என்றார் அவர்.
பெய்சிங்கில் yu qi-ping போல, வீடு வாங்க முடியாமல் இருப்பதால் அதிகமானோர் கவலைப்படுகின்றனர். இவ்வாண்டு 38 வயதான மாலியான் என்பவர், அரசு நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்துவருகிறார். வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படக் கூடும் என்று கவலைப்பட்டதினால் இதுவரையிலும் வீடு வாங்கவில்லை என்று செய்தியாளரிடம் அவர் கூறினார். நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளைக் கட்டுவதைச் சீன அரசு ஊக்குவிப்பது பற்றி பேசுகையில்,


என்னைப் பொறுத்தவரை, நடுத்தர மற்றும் சிறிய ரக வீடு எனக்குப் பொருந்தியது. நான் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். என்னுடைய வருமானத்தின் படி, பெரிய ரக வீட்டை வாங்குவது கடினமாக உள்ளது. ஆனால், சிறிய ரக வீட்டை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளின் வடிவமைப்பு நியாயமாக இருந்தால், நான் வாங்க விரும்புகிறேன் என்றார் அவர்.
சீனாவில் மூல வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளை வளர்ப்பதென்ற நுகர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுவது இன்னும் கடினமாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நேயர்கள் இதுவரை, நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளைக் கட்டுவதை ஊக்குவிக்கும் சீன அரசு என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.