தற்போது சீனாவில் மிகப் பற்றாக்குறையாகவுள்ள செம்பு, இரும்பு, ஈயம், துத்த நாகம் உள்ளிட்ட முக்கிய தாது வளங்கள், சிங்ஹா-திபெத் பீடபூமியில் ஏராளமாக இருப்பதை, சிங்ஹா-திபெத் பீடபூமி புவிநிலை புலனாய்வு கண்டுபிடித்துள்ளது. சீன புவிநிலை புலனாய்வு பணியகம் நேற்று இதனை அறிவித்துள்ளது. சிங்ஹா-திபெத் பீடபூமியில் 600க்கும் அதிகமான தாதுப் படிவுகள், தாது பொருட்கள் கிடக்கும் இடங்கள் உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில், பல நூறு கோடி டன் இரும்பு வளம் இருக்கின்றது. இப்பணியகத்தின் துணைத் தலைவர் Zhang Hong Tao பெய்சிங்கில் நடைபெற்ற தொடர்புடைய கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இத்தாது வளங்கள், சிங்ஹா-திபெத் பீடபூமியின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இத்தாது வளங்களைப் பொறுத்தவரை, "அகழ்வை விட பாதுகாப்பு மேலானது" என்ற கொள்கையைச் சீனா தற்போது கடைப்பிடித்துள்ளது என்றார், அவர்.
|