• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-13 09:29:27    
சீனாவின் சியௌச்சு

cri
இவ்வாண்டின் பெபரவரி திங்கள் 18ம் நாள் சீனாவில் சந்திரன் நாட்காட்டியின் படி வசந்த விழா நாளாகும். சீனாவின் பெருமாபாலான இடங்களில் புத்தாண்டு நாட்களில் சிசௌ ச்சு என்னும் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட டம்ப்லின் உட்கொள்ள வேண்டும். இது சீன மக்கள் வசந்த விழாவைக் கொண்டாடும் பழக்கவழக்கமாக மாறியது. இன்றைய நிகழ்ச்சியில் சியௌச்சு பற்றி அறிமுகப்படுகத்துகின்றேம். 
சியௌச்சு என்றால் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை விட மெல்லிய மாவுத் தோலில் காய்கறி மற்றும் இறைச்சி கொண்ட உருண்டை வைத்து நன்றாக ஒட்டி கொதித்த வெண்ணீரில் வேகவைக்கப்பட்ட ஒரு வகை உணவு பொருளாகும். இதன் பிறை வடிவத்தில் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்ட நாணயம் போல் சியௌச்சு செல்வம் என்று சீன மக்களால் கருதப்படுகின்றது. இதில் காய்கறி உருண்டை இருந்தால் சீன மக்களிடையில் இது திரும்ப ஒன்று கூடுதல் என்று பொருள்படுகின்றது. வசந்த விழா நாட்களில் சியௌச்சு உட்கொள்வது புத்தாண்டில் திரும்ப ஒன்று கூடுவதென்ற விருப்பத்தைக் குறிக்கின்றது. 

 
சீன மக்கள் சியௌச்சு உட்கொள் வதில் பல நடைமுறைகள் உண்டு. இதற்குத் தேவையான இறைச்சி, காய்கறிகள், கோதுமை மாவுச் சப்பாத்தி, உருவாக்கும் வழிமுறையும் வடிவமும் கண்டிப்பான முறையில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். சியௌச்சுக்கு தேவைப்படும் பொருட்கள் சைவமாகவும் அசைவமாகவும் பிரிக்கப்படுகின்றன. அசைவம் சேர்த்து தயாரிக்கும் போது இறைச்சி, காய்கறிகள் ஆகியவற்றை நுணுக்கமாக தேர்வு செய்து மரத் துண்டு பலகையின் மேல் வைத்து நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெட்டு பலகையில் கத்தியால் காய்கறியை துண்டுத் துண்டாக வெட்டும் போது ஒலிக்கும் சத்தம் ப்பன் ப்பன் என்று ஒலிக்கின்றது. சொந்த வீட்டில் காய்கறிகளை துண்டு துண்டாக வெட்டும் போது சத்தம் உரக்க ஒலிக்க வேண்டும் என்று மக்கள் பொதுவாக ஆசைபடுகின்றனர். ஏனென்றால் காய்கறித் துண்டுகளை வெட்டும் போது ஒலிக்கும் சத்தம் சீன மொழி உச்சரிப்பில் யுச்சாய் யுச்சாய் என்று ஒலிக்கின்றது. இந்த யுச்சாய் சீன மொழியில் செல்வம் என்று பொருள்படுகின்றது. யாருடைய குடும்பத்தில் காய்கறி வெட்டும் சத்தம் நீண்டகாலமாக ஒலிக்கின்றதோ அந்த வீட்டில் வாழ்க்கை பொங்கி நிறைகின்றது.
உள்ளே வைக்க வேண்டிய உருவாக்கப்பட வேண்டும். வட்ட வடிவிலுள்ள அப்பளம் போன்ற மெல்லியதான கோதுமை மாவுத் தோலை மடித்து கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து இந்த சியௌச்சு தயாரிக்க வேண்டும். கிராமப்புறத்தில் விவசாயிகள் இந்த சியௌச்சை கோதுமை கதிர் வடிவமாக உருவாக்க வேண்டும். அதன் பொருள் புத்தாண்டில் அமோக அறுவடை பெறுவதாகும். 

 
சியௌச்சு தயாரிக்கபட்ட பின் பாத்திரத்தில் கொதித்த தண்ணீரில் வைக்க வேண்டும். சியௌச்சு தனித்தனியாக தண்ணீரில் போட வேண்டும். பின் கரண்டியால் பாத்திரத்தில் சியௌச்சுக்களை நன்றாக கலக்க வேண்டும். இதன் மூலம் சியௌச்சுக்கள் பாத்திரத்தில் கீழே வீழாது. தண்ணீரில் வேகவைக்கப்படும் போது மூன்று முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். மறு செயல்பாடு செல்வம் மீண்டும் திரும்புவதாகும் என்று பொருள்படுகின்றது. 20 நிமிடம் சியௌச்சு பாத்திரத்தில் வேகவைக்கப்பட்ட பின் சுவையான சியௌச்சுகள் நன்றாக சமைக்கப்படுகின்றன. சியௌச்சுகள் வேகவைக்கப்பட்ட பின் உட்கொள்ள வேண்டும். அப்போது குடும்பத்தினர்கள் தனித்தனியாக தட்டு வைத்துக் கொண்டு மற்றவர் உட்கொண்ட சியௌச்சுகளின் உள்ளே எந்தப் பொருள் இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். பேரீச்சப் பழம் சியௌச்சு உள்ளே வைக்கப்பட்டால் புத்தாண்டில் வாழ்க்கை தேன் போல இனிப்பாகும் என்று பொருள்படுகின்றது. காசு இருந்தால் புத்தாண்டில் செல்வம் வரும் என்று பொருள்படுகின்றது. 

 
சீனா விசாலமான நிலப்பரப்பு கொண்ட நாடு. ஆகவே சியௌச்சு உட்கொள்ளும் வழக்கம் வித்தியாசமானவை. எடுத்துக்காட்டாக சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஹோ நான் மாநிலத்தில் மக்கள் வசந்த விழா நாட்களில் சியௌச்சு உட்கொள்ளும் போது நூடுல்ஸ் சியௌச்சுக்களுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். தங்க நூலால் காசுகளை சேர்க்க வேண்டும் என்று மக்கள் ஆசைபடுகின்றனர்.
சியௌச்சு சீன விழா பண்பாட்டுத் துறையில் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. சீனாவுக்கு வந்த அன்னிய நண்பர்கள் சீனாவில் சியௌச்சு உட்கொள்ளா விட்டால் சீனாவின் உண்மையான உணவுப் பொருட்களை உட்கொள்ள வில்லை
என்று உணர்ந்து கொள்வர். ஆகவே சீன மக்களை பொறுத்தவரை குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து விழாவை கொண்டாடும் போது காய்கறிகளை நறுக்கி கோதுமை மாவை கொண்டு தயாரித்த சியௌச்சுக்களை உருவாக்க வேண்டும். குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து சியௌச்சுகளை உட்கொல்வதன் மூலம் வசந்த விழாவை கொண்டாடுகின்றனர். மங்கலம், இன்பம், அமைதி, பாதுகாப்பு ஆகியவை சியௌச்சு உட்கொள்வதோடு இணைக்கப்படும்.