• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-13 11:17:11    
கால்சிய மாத்திரை உட்கொள்வதன் பயன்

cri

சரியான முறையில் கால்சிய மாத்திரை உட்கொள்ளாவிட்டால் பயன் தருவதற்கு பதிலாக தீமை விளைவிக்கும் என்பதை இந்த உதாரணங்கள் கூறுகின்றன. அப்படியிருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சிய மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி பெய்சிங் பல்கலைக்கழகத்தின் சத்துணவு மற்றும் உணவுப் பொருட்களிந் பாதுகாப்பு துறையின் பேராசிரியர் லீ கெ ச்சி கூறுகிறார்.
உண்மையில் அரசு விதித்த படி உணவுப் பொருட்கள் மற்றும் துணை உணவுப் பொருட்கள் மூலமாக பாதுகாப்பாக கால்சியம் உட்கொள்ளும் அளவு ஒரு நாளைக்கு 2000 மிலி கிராமாகும். இந்த அளவைத் தாண்டினால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றார் அவர்.


அவர் மேலும் கூறியதாவது. ஒரு நாளைக்கு 2000 மிலி கிராம் கால்சியம் உட்கொள்வது உச்ச கட்டமாகும். பொதுவாக கூறின் ஒருவர் ஒரு நாளைக்கு 700 முதல் 1200 மிலி கிராம் வரை காசியம் உட்கொண்டாலே போதுமானது. சாதாரண உணவுப் பொருட்கள் மற்றும் துணை உணவு பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது. பொதுவாக கூறின் ஒரு நாளைக்கு 350 மிலி கிராம் கால்சியம் கிடைக்கும் கூடவே பால் குடித்தால் 500 கிராம் பாலில் 600 மிலி கிராம் கால்சியம் உண்டு. ஆகவே ஒருவர் ஒரு நாளில் சமச்சீர் உணவு பொருட்களைச் சாப்பிட்டால் அதுவும் பால் குடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தால் கால்சிய மாத்திரைகளை உட்கொள்ள தேவையில்லை.


அப்படியானால் எத்தகைய மனிதர்கள் கால்சிய மாத்திரை உட்கொள்ள வேண்டும்?கால்சிய மாத்திரை உட்கொள்ள வேண்டுமானால் முதலில் உடம்பில் கால்சியத்தை பரிசோதிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வயது முதிரும் போது கால்சியம் குறைந்தால் எலும்பு தேய்வு காலில் தசைப்பிடிப்பு முதலான நோய்கள் வரு. எலும்பு வளைவது, BOWLEGGED போன்ற நோய்கள் ஏற்படும். அத்துடன் குழந்தைகளுக்கு கால்சியே குறைந்தால் இரவு அழுகை வலிப்பு உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படலாம். இந்த நோய் அறிக்குறிகள் ஏற்பட்டால் மருத்துவ மனைக்குச் சென்று எலும்பின் அடர்த்தி பற்றி பரிசோதிக்க வேண்டும். சாதாரண கால்சியம் குறைவு இருந்தால் உணவு பொருட்களை சரிப்படு்த்தினால் போதும். அவரை வகைகள், பால், இறைச்சி வகைகள் உள்ளலிட்ட உணவுப் பொருட்களைக் கூடுதலாக உட்கொண்டால் நிலைமை சீராகிவிடும். நடுத்தர அல்லது கடுமையாக கால்சியம் குறைவு ஏற்பட்டால் கால்சிய மாத்திரைகளை உட்கொள்ளலமாம்.

மேலும் கவனிக்க வேண்டிது என்னவெனில் சில சிறப்பு நோயாளிகள் கால்சிய மாத்திரை உட்கொள்ள வேண்டுமாயின் மருத்துவரின் யோசனைப்படிதான் உட்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக இருதய நோயாளிகளைப் பொருத்து கால்சிய மாத்திரை சரியான முறைப் படி உட்கொள்ளத் தவறினால் கால்சிய படிவு ஏற்படும். எனவே உயர் ரத்த அழுத்தம் ரத்த சோகை உள்ளிட்ட இருதய ரத்த குழாய் நோயாளிகளைப் பொறுத்து சிறப்பு மருத்துவர்கள் கூறும் முறைப்படி சரியான முறையில் கால்சிய மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக கால்சிய மாத்திரை உட்கொள்ளக் கூடாது. தவிரவும் தைராய்ட் ஹார்மோன் டெட்ராசைடின் TETRACYDINE ACHEOMYCIN முதலிய மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளைப் பொறுத்த வரையில் கால்சிய மாத்திரை உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஏனென்றால் இந்த மருந்துகளில் கால்சியம் இருப்பதால் அது மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் பரிசோதனை செய்த பின் கால்சிய மாத்திரை உட்கொள்ள தீர்மானித்தால் எத்தகைய கால்சிய மாத்திரை உட்கொள்வது நல்லது?தற்போது சந்தையில் பல விதமான கால்சிய மருந்துகள் விற்கப்படுகின்றன எவ்வாறு தேர்ந்தெடுப்படு என்பது பற்றி குவாங் லி யூன் அம்மையார் கூறியதாவது. 

 
நான் சுயமாக ஆராய்ந்து வருகிறேன். ஆனால் கால்சியம் கார்போனைட் உட்கொண்டால் என்னுடைய இரைப்பை சரியில்லை. ஏனெனில் நான் குடல் புண் நோயால் பீடிக்கப்படிருந்தேன். என்னுடைய இரைப்பை அவ்வளவு நல்லா இல்லை. கால்சிய கார்போநெட்டை உட்கொண்டால் இரைப்பைக்கு சுக மில்லை என்றார் அவர்.
தவிரவும் கால்சிய மாத்திரை உட்கொள்ளும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆப்பிள் கீரை குளிர்க்காலத்தில் விளையும் மூங்கில் குருத்து முதலிய அமிலச் சத்து கொண்ட பொருட்களை உட்கொள்ள கூடாது. மேலும் நல்ல பவக்கவழக்கங்களை வளர்க்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. மது குடிப்பதைக் குறைக்க வேண்டும். காப்பியைக் குறைவாக குடித்தால் நல்லது.
நேயர்கள் இதுவரை கால்சியம் உட்கொள்வது பற்றி கேட்டீர்கள். இத்துடன் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.