கடந்த ஆண்டு சீனாவின் சுற்றுலாத்துறையின் மொத்த வருமானம் 89 ஆயிரத்து 350 கோடி யுவானாகும். 2005ம் ஆண்டில் இருந்ததை விட இது, 16 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. சீனத் தேசியச் சுற்றுலா பணியகம் அண்மையில் வெளியிட்ட தரவின் படி கடந்த ஆண்டு 12 கோடிக்கு மேலான அந்நிய பயணிகள் சீனாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். சுற்றுலா மூல அந்நியச் செலாவணி வருமானம், ஏறக்குறைய 3400 கோடி அமெரிக்க டாலராகும். இவ்வாண்டு சுற்றுலா மூலம் ஒரு லட்சம் கோடி யுவான் வருமானத்தைச் சீனா பெறக்கூடும் என்று தேசியச் சுற்றுலா பணியகம் எதிர்பார்க்கின்றது.
|