• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-15 11:34:09    
சின்சியாங்கின் சுற்றுலாத் துறை வளர்ச்சி

cri
2002ம் ஆண்டின் குளிர்காலத்தில் உருமுச்சி நகரத்தில் முதலாவது பட்டுப்பாதை பனி விழா நடைபெற்ற பின், சின்சியாங்கின் பனி மற்றும் தேசிய இனச் சுற்றுலா உற்பத்தி பொருட்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குளிர்காலத்தில் உருமுச்சி சென்று பனிச்சறுக்கு செய்வது, பரவலான சுற்றுலா நிகழ்ச்சியாக மாறியுள்ளது. சீனாவின் HE NAN மாநிலத்தின் வழிகாட்டி GUO CHEN அம்மையார் பேசுகையில், குளிர்காலத்தில் உருமுச்சியில் பனியை மகிழ்ச்சியாக பார்ப்பதற்கான செலவு, கோடைக்காலத்தில் இருந்ததை விட சுமார் 30 விழுக்காடாகும். மிகவும் குறைவு என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:


நான், HE NAN மாநிலத்தின் ZHONG ZHOU சர்வதேசச் சுற்றுலா நிலையத்தில் வேலை செய்கின்றேன். சின்சியாங்கின் சுற்றுலாச் சந்தை நன்றாகவுள்ளது. பயணிகள் வந்து பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைந்தனர். பனிச்சறுக்கலைத் தவிர, தியேன் ச்சி, துருபான் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் பார்க்கலாம். மேம்பாடு உடையது என்று அவர் கருதினார்.
புள்ளிவிபரத்தின் படி, தற்போது, உருமுச்சியில் 30 பனிச்சறுக்கல் திடல்கள் உள்ளன. நாளுக்கு 20 ஆயிரம் பயணிகள் வருகை தருவதை ஏற்றுக்கொள்ளமுடியும். இதில் பட்டுப் பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN GOLF பனிச்சறுக்கல் திடல், TIAN SHAN சர்வதேச பனிச்சறுக்கல் திடல் உள்ளிட்ட பத்துக்கு மேலான பனிச்சறுக்கல் திடல்கள் குறிப்பிடத்தக்க அளவையும் தரத்தையும் கொண்டவை. இவ்வாண்டின் பட்டுப்பாதை பனி விழாவில், உருமுச்சிக்கு வந்து தங்கும் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்து, 10 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்படப்பட்டது.


சீனாவுக்கு வந்தால் தான், உலகின் அளவு தெரியும். உருமுச்சிக்கு சென்றால் மட்டும் தான், சின்சியாங்கின் அழகு தெரியும் என்று மக்கள் பொதுவாக கூறினர். சின்சியாங்கின் அழகான காட்சிகள், கோடைக்காலத்தில் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் காணப்படலாம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உருமுச்சி பட்டுப்பாதை பனி விழா, உலகின் பயணிகளுக்கு பல பங்கேற்பு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. இங்கே, நீங்கள், மேற்குச் சீனாவின் பனிக்காட்சியைப் பார்த்து, வண்ணமான தேசிய இன பழக்கவழக்கங்களை உணர்ந்து கொள்ளலாம்.
தவிர, சின்சியாங்கில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் போது, உள்ளூரின் தனிச்சிறப்பான உணவுகளைச் சுவைக்க வேண்டும். சின்சியாங்கின் சிறப்பு மிக்க சிற்றுண்டிகளில் ஆட்டிறைச்சி வறுவல், குறிப்பிடத்தக்கது. உருமுச்சியில் வைக்கூர் இனத்தின் பாரம்பரிய ஆட்டிறைச்சி வறுவல் சாப்பிடலாம்.


நேயர்கள் இதுவரை, குளிர்காலத்தில் மேற்கு சீனாவின் சின்சியாங்கில் பனியைப் பார்க்க வாருங்கள் என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய சீனாவில் இன்பப் பயணம் என்னும் நிகழ்ச்சி நிறைவடைகிறது.