ரென்மின்பிச் சேமிப்புக்கான கையிருப்புத் தொகை விகிதம்
cri
வங்கிகளின் ரென்மின்பிச் சேமிப்புக்கான கையிருப்புத் தொகை விகிதத்தை, 0.5 விழுக்காடு உயர்த்துவதென சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி இன்று தீர்மானித்தது. தற்போது, சீனாவில் சர்வதேச வரவு செலவின் உபரி முரண்பாடு இன்னமும் முனைப்பானது. நம்பிக்கைக் கடன் அளவு பெரியது ஆகிய பிரச்சினைகள் இன்னமும் நிலவுகின்றன. இதனால், ஒட்டுமொத்த சரிபடுத்தலின் பயனை வலுப்படுத்தும் பொருட்டு, ரென்மின்பிச் சேமிப்புக்கான கையிருப்புத் தொகை விகிதத்தை உயர்த்துவதென மத்திய மத்திய வங்கி தீர்மானித்தது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் இறுதி வரை, ரென்மின்பி கடனின் எஞ்சியத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதிகரிப்பு விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட உயர்வடைந்துள்ளது. ஜனவரி திங்கள், சீனாவின் வர்த்தக உபரி, 1588 கோடி அமெரிக்க டாலராகும். ஏற்றுமதித்தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகம்.
|
|