• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-16 09:55:32    
2006ம் ஆண்டில் சீன கிராம மகளிரின் பத்து மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறோம்

cri
கடந்த ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கமும் உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கு நலன் தரும் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, விவசாயிகளின் வருமான அதிகரிப்பு, கிராமப்புறத்திலுள்ள எஞ்சிய உழைப்பாளர்கள் நகரத்துக்குச்சென்று வேலையில் ஈடுபடுவது ஆகியவை ஊக்குவிக்கப்பட்டுள்ளன. விவசாய் குடும்பங்களின் வருமான வழிமுறைக் நுகர்வுக் செலவு, வாழ்க்கை வழிமுறை ஆகியவற்றின் மாற்றங்கள் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளன.

விவசாய்களின் வருமானத்தில் வேளாண் தொழில் தவிர இதர தொழில்துறைகளிலிருந்து கிடைத்த வருமானம் விகிதம், அதிகரித்து வருகிறது. குடும்ப நுகர்வுச் செலவில் நீண்ட கால பயன்பாட்டு நுகர்வு பொருட்கள் மற்றும் கல்வி தொடர்பான செலவு ஆகியவை அதிகரித்துள்ளன. விவசாயிகளின் குடும்ப சேமிப்பு அதிகரித்துள்ளது. சேமிப்பு அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் நாகரிக வாழ்க்கை வழிமுறை மற்றும் நுகர்வு வழிமுறையும், கிராமப்புறத்தில் உருவாகியுள்ளன.

முதலாவது,

கள ஆய்வு முடிவுக்கிணங்க, சீன அரசாங்கம் உருவாக்கியுள்ள வேளாண் பற்றிய முக்கிய கொள்கையான வேளாண் வரி வழங்காத கொள்கையிலிருந்து நலன் பெறுள்ளனர் என்று 89.3 விழுக்காட்டு மகளிர் தெரிவித்தனர்.

இரண்டாவது 50 விழுக்காட்டுக்கு மேலான கிராம குடும்பங்களின் சேமிப்பு கொஞ்சம் அதிகரித்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதிக்கும், மேற்கு பகுதிக்குமிடையிலான கிராம குடும்பங்களின் வருமானத்தில் தெளிவான இடைவெளி நிலவுகிறது. ஆனால் பொதுவாக கூறின், பெரும்பாலான கிராமக் குடும்பங்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டில் தத்தமது குடும்ப வருமானத்தில் செலவு போக எஞ்சிய சேமிப்பு உண்டு என்று 56.6 விழுக்காடு மகளிர் தெரிவித்தனர். எஞ்சிய சேமிப்பு 3000 யுவானுக்குட்பட்ட குடும்பங்கள், 20.5 விழுக்காடாகும். ஆனால், 10.6 விழுக்காட்டு குடும்பங்கள், கடன் வாங்கியுள்ளன. காசூ மாநிலத்தில் கடன் வாங்கும் விகிதம், 24.2 விழுக்காடு. யுவானான் மாநிலத்தில் 18.4 விழுக்காடாகும். ச்சியே சியாங், ஹூபைய் ஆகியவற்றில் 10 விழுக்காட்டு கிராம குடும்பங்கள் கடன் வாங்கியுள்ளன. நோய், வீடு கட்டுமானம், குழந்தை கல்வி ஆகியவை கடன் வாங்குவதன் காரணங்கள், ஆகும்.

மூன்றாவது

கூலி வேலை, கிராம குடும்ப வருமானத்தின் இரண்டாவது முக்கிய வேலையாக மாறியுள்ளது.

குடும்பத்தின் மிக முக்கியமான வருமானம் தானியத்திலிருந்து கிடைக்கும் என்று 77.3 விழுக்காட்டு மகளிர் கருதினர். கூலி வேலை உயர் விகிதம் இருக்கின்ற மாநிலம், ச்சியேச்சியாங் ஆகும். இதை அடுத்து, சிசுவாங், சியாங்சூ, மாநிலங்களின் விகிதம், சராசரி நிலையை விட அதிகமாகும்.

நான்காவது, 97 விழுக்காட்டு கிராமக் குடும்பங்களில் தொலைகாட்சி பெட்டி இருக்கிறது. நீண்டகாலப் பயன்பாட்டு நுகர்வு பொருட்களின் பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது.