• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-16 14:32:19    
கால்பந்து தரவரிசை

cri

கால்பந்தாட்ட தரவரிசையில் 79வது இடத்தை அண்மையில் சீனா பெற்றுள்ளது. ஆசிய அளவில் ஈரான் முதலிடம் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் இருக்க சீனா நான்காவது இடத்தில். உலகத்தரவரிசையில் ஈரானுக்கு 32வது இடம். சீனாவுக்கு 79வது இடம். அண்மையில் கசகஸ்தான் அணியுடனான போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் கிடைத்த 20 புள்ளிகளோடு மொத்தம் 409 புள்ளிகள் பெற்றதால் தரவரிசையில் 4 இடங்கள் முன்னகர்ந்து தற்போது 709வது இடத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 2010ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணியாக ஆசியாவிலிருந்து தேர்வாவதற்கு ஆசிய அளவில் 8 குழுக்களாக பிரிந்து போட்டியிட்டு, அவற்றில் சிறந்த 4 அணிகள் தகுதி பெறும். இந்த திசையில் சீன அணி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பிரேசிலை பின்னுக்குத் தள்ளி நான்கரை ஆண்டுகளுக்கு பின் உலகத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது இத்தாலி. அண்மையில் போர்ச்சுகல் அணியுடனான போட்டியில் 0 - 2 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி கண்டதால் தரவரிசையில் முதலிடத்தை இழக்க நேரிட்டது. வெற்றி தோல்விகளின் மூலமாக பெறும் புள்ளிகளைக் கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகின்றது.