• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-20 20:47:53    
தார்ஸ் கோயிலின் சீரமைப்பு

cri

சுமார் 400 ஆண்டு வரலாறுடைய திபெத் புத்த மதப் புனித இடமான தார்ஸ் கோயிலின் சீரமைப்புக்குச் சீன அரசு இவ்வாண்டு மீண்டும் ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். தார்ஸ் கோயிலின் பண்பாட்டு மண்டபம், 3வது தலாய்லாமாவின் கோபுர மண்டபம், பொருட்காட்சியகம் உள்ளிட்ட 4 கட்டடங்களின் சீரமைப்புக்கு இந்நிதித் தொகை பயன்படுத்தப்படும் என்று சீனாவின் சிங்ஹைய் மாநில பண்பாட்டுப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சீரமைப்புப் பணி இவ்வாண்டிற்குள் முடிவடையும் என்று தெரிய வருகின்றது. தார்ஸ் கோயிலானது, திபெத்தின் புத்த மதக் கருப் பிரிவின் 6 முக்கிய கோயில்களில் ஒன்றாகும். கருப் பிரிவைத் துவக்கிவைத்தவரையும் முதலாவது பென்சான் மற்றும் முதலாவது தலாய்லாமாவின் ஆசிரியர் சொங்கபாவையும் நினைவு கூரும் பொருட்டு, 1560ஆம் ஆண்டில் இக்கோயிலின் கட்டுமானப் பணி துவங்கியது. இந்த மதிப்புக்குரிய வரலாற்றுப் பண்பாட்டு மரபுச் செல்வத்தைப் பாதுகாக்கும் வகையில், தார்ஸ் கோயில் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த கட்டடங்களின் சீரமைப்புக்குச் சீன அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.