சீனாவில் 25 ஆயிரம் கிலோமீட்டர் நீள எண்ணெய் வாயு குழாய் பாதை
cri
திட்டத்தின் படி, 11வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனாவில் 25 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் குழாய் பாதை கட்டியமைக்கப்படும். சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழாய் பாதைத்துறை பணியகத்தின் தலைவர் சூ ஸி பாங் அண்மையில் செய்தியாளரிடம் இதை தெரிவித்தார். தற்போது, சீனாவில், 40 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடைய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு முதுகெலும்புக் குழாய் பாதை உள்ளது என்று தெரிய வருகின்றது. சீனாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் குழாய் பாதை கட்டுமானத்தின் முதுகெலும்புத் தொழில் நிறுவனமான சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழாய் பாதைத்துறை பணியகம், கடந்த ஆண்டு 840 கோடி யுவான் வருமானம் பெற்றுள்ளது. சீனாவின் 80 விழுக்காட்டுக்கும் மேலான எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் குழாய் பாதை கட்டுமானத்துக்கு இத்தொழில் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
|
|