• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-23 17:55:47    
மிகக்குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சிக்கான ஆதரவு

cri
அடுத்த சில ஆண்டுகளில், மிகக்குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, சீன அரசு முதலீட்டை தொடர்ந்து அதிகரிக்கும். சீனத் தேசிய இன விவகாரக் கமிட்டியிலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ள 5 ஆண்டு வளர்ச்சித் திட்டத்தின் படி, 2010ஆம் ஆண்டு வரை, மிகக்குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்கள் குழுமி வாழும் கிராமங்களின் அடிப்படை வசதிக் கட்டுமானம், இத்தேசிய இனத்தவர்களின் வருமான அதிகரிப்பு, அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கென, சுமார் 200 கோடி யுவானை சீனா ஒதுக்கீடு செய்யும்.
சீனா, பல தேசிய இனங்கள் கொண்ட நாடாகும். இத்தேசிய இனங்களில், 22 தேசிய இனங்களின் மக்கள் தொகை, ஒரு லடசத்துக்கு குறைவாக இருப்பதால், அவை மிகக்குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒதுக்குப்புற பிரதேசங்களில் இத்தேசிய இனங்கள் பெரும்பாலும் வாழ்கின்றன. அவற்றின் வளர்ச்சி, பொதுவாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.