
சீனாவின் சந்திர நாட்காட்டியின் படியான புத்தாண்டின் வருகையைக் கொண்டாடும் பொருட்டு, நேற்று ஐ.நா தலைமையகத்தில் "இணக்கமான ஒலி" என்னும் வசந்த விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அழைப்பை ஏற்று, சீனா, வங்காளத் தேசம், ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா முதலிய நாடுகளின் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா தலைமைச் செயலர் பன் கி முன் இக்கலை நிகழ்ச்சிக்கு வாழ்த்து உரை அனுப்பினார். உலக அமைதியைப் பேணிக்காப்பது என்ற ஐ.நாவின் நோக்கத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தி, இதற்காக ஐ.நா மேற்கொண்டுள்ள சளையாத முயற்சிகளை வலியுறுத்தினார்.

ஐ.நாவில் உள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Wang Guang Ya பேசுகையில், நீண்டகால அமைதியை உருவாக்குவதற்கு வெவ்வேறான கோட்பாடுகளும் கருத்துகளும் இன்றியமையாதவை என்றும், ஐ.நா ஆதரிக்கும் வெவ்வேறு நாகரீகங்களுக்கிடை பேச்சுவார்த்தையுடனும், இணக்கமான உலகத்தை உருவாக்குவது பற்றி சீன அரசு முன்வைத்த கருத்துடனும் இது ஒத்தமைந்தது என்றும் கூறினார்.
|