சீனாவின் வெளியீட்டுத்துறை
cri
தற்போது, சீனாவின் நூல் சந்தை மென்மேலும் வெளிநாட்டுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. சீனத் தேசிய செய்தி வெளியீட்டுத் துறையின் தலைமை அலுவலகத்தின் துணை இயக்குநர் Liu Bin Jie அண்மையில் பேசுகையில், சீன வெளியீட்டு விநியோகத்துறை வெளிநாட்டுத் திறப்புப் பணியில் சந்தை மற்றும் சர்வதேசமயமாகியுள்ளது என்று கூறினார். வெளியீட்டு விநியோகத்துறை, சீனாவின் அரசு சார் மூலதனத்தால் ஏகபோகப்பட்டிருந்தது. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததன் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் வெளியீட்டு விநியோகத்துறையில் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவின் நூல்கள் மற்றும் செய்தித்தாள்களின் விற்பனைத் துறையில் படிப்படியாக நுழைந்துள்ளன என்றார், அவர். சீனாவில் அந்நிய முதலீட்டாளர்களின் அச்சுத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2200ஐ தாண்டியுள்ளது. நூல் வெளியீட்டுத் துறையில், வெளிநாடுகளில் மிகவும் வரவேற்கப்படும் நூல்கள் உள்ளிட்ட, சில அந்நிய நூல்கள், சீனாவிலும் உலகின் இதர இடங்களிலும் விநியோகிக்கப்படலாம். அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பை சீனா வலுப்படுத்தியுள்ளது என்று Liu Bin Jie சொன்னார்.
|
|