• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-26 15:11:45    
2011ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி

cri
இந்தியா, ஈரான், கத்தார் ஆகிய மூன்று நாடுகள் 2011ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமைக்காக போட்டியிடவுள்ளன. இந்த போட்டியை நடத்துவதற்கான ஆர்வமுள்ள நாடுகளின் நகரங்கள் விருப்பம் தெரிவிப்பதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடந்ததால் இதுவரை ஆர்வம் காட்டிய இந்த மூன்று நாடுகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிடும். வருகின்ற ஏப்ரல் முதல் நாளுக்குள் அதிகாரபூர்வமாக இந்த நாடுகள் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்கவேண்டும் என்று ஆசியா கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. இவ்வாண்டில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறவுள்ள 2007ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுவதற்கு முந்தைய நாளான ஜூலை 28ம் நாள் அடுத்த ஆசிய கோப்பையான 2011ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பையை நடத்தும் நாடு மற்றும் நகரம் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாண்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை தாய்லாந்து, மலேசியா, வியட்னாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2011ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடத்த விண்ணப்பிக்கும் நாடுகளான கத்தார், ஈரான் மற்றும் இந்தியா ஆகியவற்றில், கத்தாரில் 2006ம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்ததும், இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2010ம் ஆண்டு காமல்வெல்த் விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.