• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-27 12:01:43    
கவிதை வரிகள்

cri
இப்போது சீனாவில் வசந்த விழா நாட்களாக உள்ளது. இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் சீன மக்கள் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவற்றில் முக்கிய பகுதியாக கருதப்படுவது கவிதை வரிகள் எழுதி கதவின் இரண்டு பக்கங்களில் ஒட்டுவதாகும். இது பற்றிய கதை இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக கூறப்படுகின்றது. 
வசந்த விழா வருவதற்கு முன் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டுக் கதவின் இரண்டு பக்கங்களிலும் மிக புதிய கவிதை வரிகள் ஒட்டப்பட வேண்டும். சிவப்பு காகிதத்தில் கருப்பு நிற எழுத்துக்களில் கவிதை வரிகள் உள்ளன. வண்ணமான மகிழ்ச்சியான கவிதை வரிகள் மங்கலமாக குறிக்கும் வாழ்த்துக்களால் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வசந்தம் வரும் போது இன்பமும் மங்கலமும் மனித குலத்தில நிறையும் என்பது போன்ற வாக்கியங்கள் அடிக்கடி கவிதை வரிகளில் காணப்படுகின்றன. 


கவிதை வரிகள் பற்றி குறிப்பிடும் போது மக்கள் தாங்கள் கேட்ட பல கதைகளை கூறுவார்கள். அதாவது, இந்த கவிதை வரிகள் அரக்கனைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சீனாவில் கடவுள் கதைகள் பரவலாக நிலவின. கிழக்குக் கடலில் அருமையான இயற்கைக் காட்சிகள் உள்ள துசோ சான் என்னும் மலை மிதந்தது. இந்த மலையின் இன்னொரு பெயர் தௌதுசான் என்பதாகும். மலையில் வளர்ந்த பீச் மரத்தின் வேர் 1500 கிலோமீட்டர் தொலைவு நீடித்திருந்தது. அதன் ஒரு வேரில் வளர்ந்த கிளை மரத்தின் அடிவாரம் வரை வளர்ந்தது. தொலை தூரத்திலிருந்து பார்த்தால் இது கதவு போல் காணப்படுகின்றது. இந்த மலையில் பல்வகை தேவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மலையடிவாரத்துக்கு வந்து இந்த கதவைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும். ஆகவே இந்த கதவு "தேவன் கதவு" என்று அழைக்கப்பட்டது. மரத்தின் உச்சியில் வாழ்ந்த தங்க நிற சேவல் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு முன் கூவுவதன் மூலம் நாள் துவங்குவதை குறிக்கின்றது. சேவல் கூவுவதற்கு முன் வெளியே சென்ற தேவர்கள் இந்தக் கதவுக்குள் நுழைய வேண்டும். இந்தக் கதவை இரண்டு தேவ வீரர்கள் பாதுகாத்து வந்தனர். ஒருவரின் பெயர் சன்சூ. இன்னொருவரின் பெயர் யூலெ. அவர்கள் தேவர்களின் செயல்களை கண்காணித்தனர். தேவர்களில் யாராவர் சட்டத்தை மீறி செயல்பட்டால் அவர்கள் கயிற்றைக் கொண்டு சட்டமீறும் தேவனை கைது செய்து புலியிடம் அனுப்பினர். ஆகவே சன்சூ யூலெ அவர்கள் மீது தேவர்கள் பயம் கொண்டனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு மதிப்பு அளித்தனர். அரக்கனைத் தடுக்கும் வகையில் மக்கள் இந்த தேவ வீர்களின் பெயர்களை பீச் மரத் துண்டில் எழுதி கதவில் தொங்க விட்டனர்.


கி.பி. 7ம் நூற்றாண்டில் சீனாவின் தான் வம்ச காலத்தில் மரத் துண்டில் தீட்டப்பட்ட தேவ வீரர்களுக்குப் பதிலாக வேறு படைவீரர்கள் இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டன. இது பற்றிய கதை உண்டு. அதாவது, தான் வம்சகாலத்தின் 2வது மன்னர் தாந்தைச்சுன் மாளிகைக்கு அப்பால் அரக்கனைகள் கூடியுள்ளனர் என்பதை கனவில் பார்த்தார். அவரால் நன்றாக தூங்க முடியவில்லை. அப்போது தான் வம்சத்தை தோற்றுவித்த தளபதி சிங்சூபாவ், வெஸுக்குன் இருவரும் ஆயுதம் கொண்டு மாளிகையின் நுழைவாயிலில் காவலராக பணிபுரிந்து மன்னரை பாதுகாத்தனர். அப்போது மன்னர் தாங்தைச்சுன் நன்றாகத் தூங்கினார். பல நாட்களாக இவ்விரண்டு வீரர்கள் பகலிலும் இரவிலும் மன்னரை பாதுகாத்தனர். அவர்களின் களைப்பை நீக்குவதற்காக இந்த வீரர்களின் தோற்றத்தை தீட்டிய ஓவியங்களை கதவின் இரண்டு பக்கங்களில் ஒட்டுமாறு மன்னர் கட்டளையிட்டார். இந்தக் கதை அப்பாவி மக்களிடையில் பரவிய பின் இந்த வீரர்களின் தோற்றம் தீட்டப்பட்ட ஓவியங்கள் மக்களின் வீட்டு கதவுகளில் ஒட்டப்பட்டன. பின் பீச் மரத் துண்டில் உள்ள தேவர்களின் பெயர்களுக்கு பதிலாக இந்த வீரர்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. அப்போதைய பீச் மரத் துண்டு இப்போதைய கவிதை வரிகளின் தோற்றமாகும். கி.பி.964ம் ஆண்டில் வசந்த விழா வந்த போது மன்னராட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பீச் மரத் துண்டில் மங்கலத்தை குறிக்கும் சில வரிகளை எழுதினார். அப்போது முதல் அறிஞர்கள் கவிதை வரிகளை எழுதுவதை நாகரீகமான அம்சமாகக் கருதினர். படிப்படியாக கவிதை வரிகள் எழுதுவது மக்களிடையில் பரவியது.


இந்தக் கவிதை வரிகள் துவக்கத்தில் மன்னராட்சி குடும்பத்தில் பரவின. 14ம் நூற்றாண்டு சீனாவில் அபோது மின் வம்ச காலம். அப்போது முதல் கவிதை வரிகள் ஒட்டுவது பொது மக்களிடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை குடும்பத்தில் பிறந்த மன்னர் ச்சுயூச்சான் புத்தாண்டின் முந்திய பண்டிகையில் ஒவ்வொரு குடும்பமும் கதவில் கவிதை வரிகளை ஒட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார். வசந்த விழா வந்த முதலாம் நாளில் சுயூச்சான் மறைமுகமாய் மக்களிடையில் சென்று ஒவ்வொரு குடும்பத்தின் கதவை பார்வையிட்டார். பன்றியை கொல்பவரின் குடும்பத்திற்காக அவர் கவிதை வரிகளை எழுதினார். அப்போது முதல் வசந்த விழா நாட்களில் கவிதை வரிகள் ஒட்டும் வழக்கம் சீனாவில் உண்மையாக பரவியது. இது வரை இது சீன வசந்த விழாவைக் கொண்டாடும் நடவடிக்கைகளில் ஒன்றாக தொடர்ந்துள்ளது.