• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-27 16:29:38    
சிகிச்சைக்குச் சமூக சேவை ஆலோசனை

cri

வணக்கம் நேயர்களே. சீனா அதிக மக்கள் தொகை கொண்ட தொரு வளரும் நாடாகும். அதன் மருத்துவக் காப்பீட்டு முறை இன்னும் முழுமையாக இல்லை. எவ்வாறு நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெற்றோருக்கு குறைவான செலவு ணற்றும் பயன் மிக்க முருத்துவச் சேவை செய்வது என்பது சீநாவின் பல்வேறு சமூகத் துறைகள் அக்கறை கொள்ளும் பிரச்சினையாகும். இன்றைய நிகழ்ச்சியில் வட சீனாவின் ஷ்சியா சுவான் நகர் இப்பிரச்சினை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி பார்ப்போம். அறிவிப்பாளர் தி. கலையரசி


ஷ்சியா சுவான் நகர் வட சீனாவின் அமைந்துள்ள நிலம் சூழந்த நகராகும். அதன் மக்கள் தொகை 90 லட்சம். நகரவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை வசதி அளிக்கும் வகையில் இந்நகராட்சி மக்கள் குழுமி வாழும் இடங்களில் பல குடியிருப்பு பிரதேச மருத்துவ சேவை நிலையங்களை நிறுவியுள்ளது. எமது செய்தியாளர் அண்மையில் இந்நகரின் ஜின்மா சந்தைக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவ சேவை நிலையத்துக்குச் சென்று பார்த்தார். இம்மருத்துவ சேவை நிலையம் சுத்தமாக உள்ளது.

நோயாளிகளுக்குக்காக ஏற்பாடு செய்யப்பட்ட படுக்கைகள் சுத்தமாகவும் அதன் படுக்கை விரிப்புகள் அழகாகவும் உள்ளன. 10 நிமிடத்திற்குள் 5, 6 நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு ஆலோசனை பெறுவதற்கு வருகை எங்கள் செய்தியாளர் கண்டறிந்தார்.
இந்த மருத்துவ சேவை நிலையத்துக்கு அருகில் பல குடியிருப்பு பிரதேசங்கள் உள்ளன. தவிரவும் இங்கு ஒரு பெரிய சந்தையும் ஒரு சிறப்பு அங்காடியும் உண்டு. இங்கு சுமார் 10 ஆயிரம் நகரவாசிகள் வாழ்கின்றனர். மருத்துவ சேவை நிலையம் நிறுவப்பட்டமை, நகரவாசிகள் சிகிச்சை பெறுவதற்கு வசதி அளித்துள்ளது. தவிரவும், நாடோடி மக்கள் ஏழைரழ் வேவையில்லாதோர் ஊனமுற்றோர் ஆகியோருக்கும் இந்நிலையம் சலுகைகள் வழங்குகின்றது. மருத்துவ சேவை நிலையம் ஏழை மக்களுக்கு சலுகைகள் வழங்குகின்றது. விதிகளின் படி 10 விழுக்காடு மருத்துவ கட்டணம் குறைக்கப்படுகின்றது என்று இம்நருத்துவ சேவை நிலையத்தின் தலைவர் குவான் சின் சியுவான் கூறினார். தவிரவும் மேல் நிலை மருத்துவ மனையின் மருத்துவர்கள் குடியிருப்புப் பிரதேசத்தில் நிபுணர்கள் குழுவை உருவாக்கியுள்ளனர். சிக்கல் வாய்ந்த நோய்களால் பிடிக்கப்பட்டால் உரிய காலத்தில் அவர்களிடம் சென்று சிகிச்சை பெறலாம். சிறப்பு பரிசோதனை செய்ய வேண்டுமாயின் மேல் நிலை மருத்துவ மனைக்கு அனுப்பப்ட்டு உடல் பரிசோதனை செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


தற்போது குடியிருப்பு பிரதேசங்களில் 1400க்கும் அதிகமான மருத்துவர்களும் செவிலியர்களும் உட்பட மொத்தம் 197 மருத்துவ சேவை நிலையங்கள் உள்ளன. வசதி மற்றும் சிறந்த சேவையின் காரணமாக அவை நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெருவோரின் பாராட்டைப் பெற்றுள்ளன.


சாதாரண நோய்களால் பீடிக்கப்பட்ட நோயாளிகள் அங்கே சென்று சிகிச்சை பெறலாம். அது மக்களுக்கு வசதி அளிப்பதுடன் அவர்களின் செலவையும் குறைத்துள்ளது. சிக்கல் வாய்ந்த பெரிய நோய்களால் பீடிக்கப்பட்டால் பெரிய மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படுகின்றது. ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யத் துணை புரியும் பொருட்டு ஷிசியா சுவான் நகரில் அளவில் மிகப் பெரிய ஷ்சியா சுவான் நகர மைய மருத்துவ மனையை வெய் மின் மருத்துவ மனை என ஷ்சியா சுவான் நகராட்சி நிர்ணயித்துள்ளது. நகராட்சி அரசு இத்தகைய மருத்துவ மனைகளுக்கு குறிப்பிட்ட மானியம் வழங்குகின்றது. ஏழை நோயாளிகள் இத்தகைய மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை செய்தால் முன்னுரிமையுடன் கூடிய மருத்துவ சேவையை அனுபவிக்கலாம். அதாவது பதிவுக் கட்டணம் வழங்கத் தேவையில்லை. பரிசோதனைக் கட்டணத்தில் 10 விழுக்காடும் சிகிச்சை கட்டணத்தில் 5 விழுக்காடும் படுக்கைக் கட்டணத்தில் 50 விழுக்காடும் குறைக்கப்படுகின்றன.