சீனாவில் நாணய சீர்திருத்தம்
cri
நாளை "Qiu Shi" என்னும் சீன இதழில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் எழுதிய கட்டுரை வெளியிடப்படும். நாணயச் சீர்திருத்தத்தை சீனா பன்முகங்களிலும் ஆழமாக்கி, நாணயத் தொழிலின் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சியைத் தூண்டும் என்று கட்டுரையில் அவர் கூறினார். நாணயத் தொழிலின் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சியை மேலும் தூண்டுவது, நாணயக் கட்டமைப்பை மேம்படுத்துவது, பல்வகை நாணயத் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, அலுவல் முறைமையை விரைவாக மாற்றுவது ஆகியவை, இனிமேல், சீனாவின் நாணயப் பணிகளின் முக்கிய கடமையாகும் என்று வென் சியாபாவ் சுட்டிக்காட்டினார். தற்போதும், அடுத்த காலக் கட்டத்திலும், நாணயத் தொழிலின் வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா ஆக்கப்பூர்வமாகவும், படிப்படியாகவும் தூண்டி, வெளிநாட்டுத் திறப்புப் பணிகளின் தரத்தை உயர்த்தி, நாணயக் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தி, நாணயத்தின் நிதானத்தையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்யும் என்று வென் சியாபாவ் வலியுறுத்தினார்.
|
|