• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-28 15:43:36    
நேயர்களின் கருத்துக்கள்

cri

வளவனூக் புதுப் பாளையம் எஸ் செல்வம் தெரிவித்த முக்கிய தகவல்.

"செல்லிடைத்தொலைபேசி நிறுவனங்கள் வழங்கும் இலவச வாய்ப்புக்களை பயன்படுத்தி தற்போது தமிழ்நாட்டில் உள்ள நேயர்களுக்கு மட்டுமே செல்லிடைப் பேசி வலைப்பின்னல் அமைப்பு மூலம் சீனா மற்றும் சீன வானொலி நிலையம் பற்றிய தகவல்களை நாள்தோறும் அனுப்பிக் கொண்டு வருகிறோம். இனி, இந்த தகவல்களை இந்தியாவின் இதர மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நேயர்களுக்கும் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, வலைப்பின்னல் அமைப்பின் செய்திகளைப் பெற விரும்பும் நேயர்கள், தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் இருப்பிட முகவரி ஆகியவற்றை nbalakumar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே, இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நேயர்கள் விரும்பினால் அவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீன வானொலி நிலையம், மற்றும் சீனா தொடர்பான புத்தம்புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்"

பாண்டிச்சேரி பெ.சந்திரசேகரன்
சீன பண்பாடு நிகழ்ச்சி தொடர்ந்து கேட்டு வருகிறேன். கடந்த வாரத்தின் தொடர்ச்சியை இந்த வாரம் கேட்டேன். சீன வசந்த விழா, சீன புத்தாண்டாகவும் வருவதையும், விழாவிற்கு முன்னும், பின்னும் மக்கள் எப்படி கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதையும், சீன வசந்த விழா உருவான கதையும், சீன மக்களின் நம்பிக்கை பெருவிழாவாகவும் இருந்து வருவதையும் அறிந்தேன். நிகழ்ச்சி வழங்கிய திரு.கிளீட்டஸ் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவின் மூலம், சீன மக்களின் துன்பத்தை போக்கி, வசந்தம் மலர்ந்திட  வாழ்த்துகிறேன்.

சீன வசந்த விழாவிற்காக ஒரு வாழ்த்துரை எழுதி இருக்கிறேன்.

ஒளி மயமான எதிர் காலத்தை
ஒன்று கூடி உருவாக்க
சந்திர நாள் காட்டியில்
இருவரும் சந்தித்து உருவான
சீன வசந்த விழாவே வருக... வருக...

சீன மக்களின் வாழ்விலும்,
வளத்திலும் வளர்மை தருக... தருக...

வசந்தமே,
வீடு தேடி வந்து
வான் மழை என
வான வேடிக்கை பொழிந்து
உங்கள் வாழ்நாள் முழுவதும்
வசந்தத்தை தர வந்த
புத்தாண்டே வருக... வருக...

சீன மக்களின் வாழ்விலும்
புது பொழிவை தருக... தருக...

சீனத்து வீடேங்கும் சென்னீர
அலங்காரத்தை கண்டு
காலைடில் விழிக்கும் சூரியனுக்கே
கண் கூச
இரவை, பகலாகி கொண்டிருக்கும்
வானத்து வீண் மீன்களே
சீனத்து வீதியை விட்டு செல்ல
மனம் வரவில்லையா

இப்படி ஒரு இனிய விழா
எங்கள் சீனத்தில் பூத்த
வசந்த விழாவே
வருக... வருக...

சீன மக்களின் வாழ்விலும்
மகிழ்ச்சியை தருக... தருக...