சீனாவின் மேற்கு பகுதியில், எண்ணெய், இயற்கை வாயு உள்ளிட்ட தாதுப் பொருட்கள் மிகவும் அதிகம் என்றும், இப்பகுதியின் மேம்பாடுடைய வளங்களின் வளர்ச்சியில் அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் பங்கெடுப்பதை சீனா வரவேற்கின்றது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டித் துணைத் தலைவர் Wang Jin Xiang கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், எரியாற்றல், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட தனித்தன்மையும் மேம்பாடும் வாய்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும் என்று 2006-2010ஆம் ஆண்டு வரையான, மேற்கு பகுதிக்கான பெரும் வளர்ச்சி திட்டம் முன்வைத்தது என்றார். அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள் இவ்வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, மேற்கு பகுதியின் தாதுப் பொருட்கள், தனித்தன்மை வாய்ந்த பண்ணை மற்றும் பண்ணைசார் பொருட்கள் உள்ளிட்ட வளங்களின் அகழ்வு மற்றும் ஆழ்பதனீட்டில் பங்கெடுக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.
|