
《சீனாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான பொதுத்திட்டம்》என்ற தலைப்பிலான நூலைச் சீன அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
20 தொகுதிகளுடன் கூடிய இம்மாபெரும் படைப்பு, இக்கழகத்தின் தலைவர் லு யுங் சியாங் தலைமையல் 184 மூத்த வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களால் தொகுத்து எழுதப்பட்டது. தொடரவல்ல வளர்ச்சிக்கான சீனாவின் நெடுநோக்குத் திட்டத்தின் பல முக்கிய குறிக்கோள்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்த 50 ஆண்டுக்காலத்திற்குள், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலில், சீனா உலகின் முதல் 3 இடங்களில் நுழைவது, அடுத்த 50 ஆண்டுக்காலத்திற்குள், நவீனமயமாக்கல் நிலையில் சீனா உலகின் 10 முன்னணி நாடுகளில் அடியெடுத்து வைப்பது, 2050ஆம் ஆண்டு, சீன மக்களின் சராசரி எதிர்பார்ப்பு ஆயுள் காலம் 85 ஆண்டுகள் என்பன, இந்த முக்கிய குறிக்கோள்களில் அடங்கும்.
இப்பொதுத் திட்டத்துக்கு இணங்க, பெய்ஜிங் மாநகரம், 2018ஆம் ஆண்டு நவீனமயமாக்கலை நிறைவேற்றும் முதல் நகரமாக விளங்கும்.
உலகில் மிக மகிழ்ச்சிகரமான மக்கள்
உலகில் 178 நாடுகளில், மிகவும் மகிழத் தக்க நாடு என்ற பெருமை, டென்மார்க்கையே சாரும் என்பதில் ஐயமில்லை.
டென்மாக் நாட்டில் ஏழைகள் இல்லை. 12 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்கு ,மதிப்பு எண் பற்றிய அறிக்கை வழங்கப்படுவதில்லை. குழந்தைகள் இயல்பாக வளர்வதை ஆசிரியர்களும் பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர்.

தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்விகள் எல்லாம் இலவசமானவை.அன்றியும், மாணவர்களுக்கு, வாழ்க்கைச் செலவுக்கான உதவித்தொகையும் கிடைக்கும்.
டென்மார்க்கில், தொழில் பேதம் ஏதுமின்றி மக்கள் சமத்துவமாக வாழ்கிறார்கள். அதன் துணைத் தலைமையமைச்சர், வேளாண் பள்ளியில் படித்து முடித்தவர். அமைச்சர்களில் பலர், மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதியை மட்டும் பெற்றவர்கள். எனினும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் படிப்பு என்ற கோட்பாட்டுக்கு இணங்கச் செயல்பட்டு, நாட்டை ஆள்வதில் சிறந்து விளங்குகிறாற்கள்.
|