• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-01 14:18:47    
நிங்சியா யீ சுவான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரம்

cri

சீனாவின் வடமேற்கு பிரதேசத்தின் தரிசு நிலத்திலும் கோபி பாலைவனத்திலும், வரலாற்று மரப்புச்சிதிலமான பல அரண்கள் உள்ளன. கிழக்கு HOLLYWOOD எனப்படும் ச்சேன் பெய் பாவ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரம் இத்தகைய அரண்களில் ஒன்றாக இருக்கிறது. இன்று நாங்கள் சேர்ந்து சென்று, இவ்வரணை உணர்ந்து கொள்ளலாம்.

 
மிங் மற்றும் சிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட எல்லை நகரமான ச்சேன் பெய் பாவ், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள நிங்சியா ஹுவே இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் யீ சுவான் நகரத்துக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் இரண்டு அரண்கள் உள்ளன. பழைய அரணின் பெயர், மிங் நகரம், அது, 16ம் நூற்றாண்டில் மிங் வம்சத்தால் கட்டியமைக்கப்பட்டது. புதிய அரணுக்கு, சிங் நகரம் என்று பெயர். அது, 1740ம் நூற்றாண்டில் ச்சிங் வம்சத்தால் கட்டியமைக்கப்பட்டது. மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிங் நகரம், வரலாற்றில் எல்லைப்பாதுகாப்புக்கான முக்கிய நகரமாகியது. தற்போது, இந்நகரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திரைப்பட கலைஞர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்குள்ள பாழடைந்த வீடுகள், திரைப்படப் பிடிப்புக்கான காட்சி இடங்களாக மாறியுள்ளன.
வழிகாட்டி நியு சூ ஹுவே அம்மையார், கலகலப்பும் உற்சாகமுமான பெண்மனியாவார். அவர் இங்கு பத்து ஆண்டுகளாக வேலை செய்கிறார். ச்சேன் பெய் பாவ், தமது வீடே என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

 
முன்பு, இங்கு, அடிப்படை வசதிகளின் நிலை மோசமாக இருந்தது. சுற்றுப்புறத்தில் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஏதுமில்லை. கடந்த சில ஆண்டுகளின் வளர்ச்சியுடன், மென்மேலும் அதிகமான திரைப்படங்கள் இங்கே தயாரிக்கப்பட்டதால், காட்சி இடங்கள் மேலும் கூடுதலாகிவிட்டன. இந்தத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட பண்பாடுகள், சீனாவின் வடமேற்கு பகுதியின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் காட்டுகின்றன. சுற்றுலாத் துறை செவ்வனே இயங்குவதால், இந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் அவர்.

 
ச்சேன் பெய் பாவ் வில் திரைப்படத்தைத் தயாரித்த முதலாவது சீன இயக்குனரின் பெயர், ZHANG JUN ZHAO. ஒருவர் மற்றும் எட்டு பேர் என்னும் திரைப்படத்தை அவர் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், தற்போது மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் ZHANG YI MOU ஆவார். அப்பொழுது முதல், மேற்கு சீனாவின் காட்சிகளைக் கொண்ட இந்த பண்டைய அரணை, அவருக்கு மிகவும் பிடிக்கிறது. 1988ம் ஆண்டில், பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி என்ற விருதை பெற்ற சிவப்புச் சோளம் என்னும் திரைப்படம், இங்கே தான் தயாரிக்கப்பட்டது. பிறகு, மஞ்சள் நதி நாட்டுப்புறப் பாடல், சியெள குடும்ப முற்றம் உள்ளிட்ட திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இங்கே தயாரிக்கப்பட்டதால், உலகம் சீனாவின் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மட்டுமல்ல, சீனாவின் மேற்கு பகுதியையும் மேலும் அதிகமாக கண்டு அறிந்துகொண்டுள்ளது.

 
ச்சேன் பெய் பாவ் விலுள்ள பெரிய கையெழுத்துச் சுவர் பற்றி, வழிகாட்டி நியு சூ ஹுவே அம்மையார் கூறியதாவது:
இச்சுவரில், கலைஞர்களின் தலைச்சிறப்பான கையெழுத்துக்களைக் காணலாம் என்றார் அவர்.