வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் வணிக அலுவலகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டு, உள் மங்கோலியாவுக்கும் ரஷியா மற்றும் மங்கோலிய நாட்டுக்கும் இடையிலான நுழைவாயில்களின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள், 3 கோடி டன்னை முதன்முதலாகத் தாண்டியுள்ளன. 3 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் டன்னை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு, உள்மங்கோலியா, ரஷியா இடையிலான வர்த்தகத் தொகை, 220 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. மங்கோலிய நாட்டுடனான வர்த்தகத் தொகை, 58 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட முறையே 30 விழுக்காடு மற்றும் 57 விழுக்காடு அதிகமாகும். ரஷியாவும், மங்கோலிய நாடும் உள் மங்கோலியாவின் முதலாவது மற்றும் இரண்டாவது பெரிய வர்த்தக ஒத்துழைப்பு கூட்டாளிகளாக மாறியுள்ளன. ரஷியா மற்றும் மங்கோலியாவை ஒட்டியமைந்துள்ளது உள் மங்கோலியா. தற்போது அங்கு 18 நுழைவாயில்கள் உள்ளன.
|