• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-02 14:23:52    
12வது சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு சாம்பியன் போட்டிகள்

cri

சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் 12வது உலக சாம்பியன் பட்டப்போட்டிகள் எதிர்வரும் 17ம் நாள் முதல் ஏப்ரல் திங்கள் முதல் நாள் வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறவுள்ளன. நீச்சல், நீர் பாய்ச்சல் அல்லது நீர் குதிப்பு, ஒருங்கிணைந்த நீச்சல் திறமை, வாட்டர் போலோ உள்ளிட்ட முக்கிய போட்டிகள், பல்வேறு பிரிவிகள் மற்றும் வகைகளாக நடத்தப்படும். 158 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து நீச்சல் வீரர்களும் வீராங்கனைகளும் இந்த 12வது சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் உலக சாம்பியன் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் டைவிங் எனப்படும் நீர் பாய்ச்சல் அல்லது நீர் குதிப்பு போட்டியில் சீனாவின் குவோ ஜிங்ஜிங் தலைமையில் சீன அணி பங்கேற்று வெற்றிகளை குவிக்கும் என்று நம்பப்படுகிறது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக இந்த நீர் குதிப்பு போட்டிகளின் முக்கியமான ஒரு சர்வதேச போட்டிக்களமாக இந்த உலக சாம்பியன் பட்ட போட்டிகள் அமைந்துள்ளன. இந்த உலக சாம்பியன் பட்டப் போட்டியிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெறுவோர் ஒலிம்பிக்கில் பங்கேற தகுதி பெறூவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.