• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-02 14:34:22    
ரோஜர் ஃபெடரரின் சாதனை

cri

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாட்டில் புதிய ஒரு சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 160 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையின் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜிம்மி கான்ர்ஸின் சாதனையை ரோஜர் ஃபெடரர் கடந்த வாரம் முறியடித்தார். 1974 ஜூலை முதல் 1977 ஆகஸ்ட் வரை தொடர்ச்சியாக 160 வாரங்கள் தரவரிசையில் முதலிடத்தில் நின்ற ஜிம்மி கானர்ஸின் 30 ஆண்டுகால சாதனைப் பதிவை தற்போது ரோஜர் ஃபெடரர் முறியடித்து புதிய பதிவு ஒன்றின் துவக்கத்தில் நுழைந்துள்ளார். 2004ம் ஆண்டு பிப்ரவரித்திங்கள் 2ம் நாள் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியை வென்றபின் தரவரிசையில் முதலிடம் பெற்ற ரோஜர் ஃபெடரர் தற்போது வரை அதாவது 3 ஆண்டு காலமாக தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக 161 வாரங்கள் கடந்து 162வது வாரத்தில் நுழைந்துள்ள இவரது தரவரிசை பட்டியலின் புள்ளிகள் 8120. இவருக்கு அடுத்தபடியாக உள்ள ரஃபேல் நாடலின் புள்ளிகளோ 4705 ஆக, ஏறக்குறைய 3500 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் ரோஜர் ஃபெடரர் நிற்பதால் அண்மை எதிர்காலத்தில் இவரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெறக்கூடியவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

25 வயது ரோஜர் ஃபெடரர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனது 10வது கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரும் பரிசுத்தொகையும், தலை சிறந்த பன்னாட்டு நட்சத்திரங்களின் பங்கேற்பும் கொண்ட போட்டியை வென்றார்.