• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-02 15:02:32    
2008 பெய்சிங் ஒலிம்பிக் பற்றிய பரப்புரையாக நீச்சல்

cri
கடந்த ஞாயிறன்று சீனாவைச் சேர்ந்த 2 நீச்சல் வீரர்கள் நியுசிலாந்து நாட்டின் குக் நீரிணையை நீந்திக் கடந்தனர். அலைகள் மேலெழும்பி அச்சுறுத்திய நிலையிலும் 8 மணி நேரம் 5 நிமிடத்தில் இந்த நீரிணையை நீந்திக் கடந்தனர் 20 வயது ஷங் ஜியே மற்றும் 23 வயது வெய் கங். 30 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த குக் நீரிணையை கடந்த இந்த இருவரும் சீனாவின் புகழ்பெற்ற நீச்சல் நீரர் ஷங் ஜியனின் தலைமையிலான ஒரு அணியாக புறப்பட்டு உலகின் பல பகுதிகளில் உள்ள நீரிணைகளையும், கால்வாய்களையும் நீந்திக் கடந்து 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளை பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2001ம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாய் மற்றும் சைபீரியாவுக்கும் அலாஸ்காவுக்கும் இடையில் உள்ள பெரிங் நீரிணை ஆகியவற்றை நீந்திக்கடந்த ஷங் ஜியனின் தலைமையில் இந்தக் குழு இந்த குக் நீரிணையை நீந்திக் கடந்த பிறகு, மத்தியத்தரைக்கடலும் அட்லான்டிக் பெருங்கடலும் இணையும்ம் ஸ்பெயினுக்கும் மொர்ரொக்குவுக்குமிடையிலுள்ள ஜிப்ரால்டர் நீரிணை, கரீபியக்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணையும் பனாமா கால்வாய், சைபீரியாவையும், அலாஸ்காவையும் இணைக்கும் பெரிங் நீரிணை, செங்டல் ஆகியவற்றை நீந்திக்கடக்க திட்டமிட்டுள்ளனர்.