பெரும்பாலான குடும்பங்களில் பல்வகையான வீட்டு மின் பொருட்கள் இருக்கின்றன. அவற்றில், தொலைக்காட்சி பெட்டி மிக அதிகமாகும். 97 விழுக்காட்டு குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டி இருக்கின்றது. தகவல் பெறுவது, பொழுது போக்கு ஆகியவற்றில் தொலைகாட்சி பெட்டி முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. சலவை இயந்திரம் இரண்டாவது இடம் வகிக்கிறது. ஹூநான் மாநிலம் தவிர, இதர மாநிலங்களின் சலவை இயந்திரம் பயன்படுத்தப்படும் விகிதம், 60 விழுக்காட்டை எட்டியுள்ளது. மூனறாவது இடம் வகிக்கின்ற மின் பொருள், தி வே தி அல்லது வே சி தி ஆகும். ஹேநான் மாநிலம் தவிர, பிற மாநிலங்களில் இதன் பயன்படுத்தப்பட்டு விகிதம், 40 விழுக்காட்டுக்கு அதிகமாகும்.
விவசாயிகளின் குடும்ப வருமானம் உயர்ந்ததுடன், வீட்டு மின் பொருட்கள், வெகுவேகமாகவும், பரவலாகவும் குடும்பத்தில் நுழைந்துள்ளன. விவசாய்களின் அறிவை உயர்த்தி, வாழ்க்கையை மேம்படுத்தி, மகளிரின் வீட்டு பணிக் கடமையை குறைத்து, உள் நாட்டின் நுகர்வை முன்னேற்றுவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஐந்தாவது பரும்பாலான குடும்பங்களில் குழாய் நீரும், தூய்மையான கழிவறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆறாவது, புதிய கிராம உருவாக்கத்தை மகளிர் அறிந்துக் கொள்வதன் விகிதம், 78.9 விழுக்காட்டை எட்டியுள்ளது. ச்சிலீன், சிசூவாங், ச்சிசூ ஆகிய மாநிலங்களின் சுமார் 90 விழுக்காட்டு மகளிர் புதிய கிராமம் என்பதை அறிந்துக் கொள்கிறனர். பண்பாட்டு அறிவு நிலை, புதிய கிராம உருவாக்கத்துக்கு கவனம் செலுத்தும் அளவை தீர்மானித்துள்ளது.
ஏழாவது கிராமப்புற மகளிரின் ஓய்வு நேரத்திலான வாழ்க்கை பல்வகைமயமாக்கத்தை நிறைவேற்றியுள்ளது, 76.7 விழுக்காட்டு கிராமப்புற மகளிருக்கு ஓய்வு நேரத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முதலாக பிடிக்கும். வீட்டு பணி மேற்கொள்வது இரண்டாவது இடம் வகிக்கிறது. மற்றுபடி, நூல்களையும் செய்தித்தாள்களையும் படிப்பதும் பேச்சில் ஈடுபடுவதும் அவர்களுக்கும் பிடிக்கும். 14.2 விழுக்காட்டு மகளிர், ஓய்வு நேரத்தில், உடற் பயிற்சியில் ஈடுபட விரும்புகின்றனர். வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளதை இவை வெளிக்காட்டியுள்ளன.
எட்டாவது, 74.8 விழுக்காட்டு கிராமங்களில், குழுப் பண்பாட்டு நடவடிக்கைகள் இருக்கின்றன. 25 விழுக்காட்டு கிராமங்களில், அடிக்கடி குழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்பதாவது கிராமப்புற நாகரீகத்தின் உள்ளடக்கத்தை மகளிர் அறிந்துக் கொள்வதன் விகிதம், அதிகமாக இருக்கிறது. குடும்பத்தில் மனைவிக்கும் கணவருக்குமிடையிலான இணக்கம், அண்டை வீட்டுக்காரர்களுக்களுக்கிடையில் நட்புறவு, முதியோருக்கு மதிப்பு அளித்து, குழந்தைகளை விரும்புவது, முதலியவை உள்ளடக்கததில் இடம் பெறுகின்றன.
பத்தாவது, 60 விழுக்காட்டு கிராம மகளிர் மகழ்ச்சி உணர்வை அடைக்கிறனர். 80 விழுக்காட்டு மகளிர் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.
|