• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-05 16:38:18    
பெய்சிங் ஒலிம்பிக் தொடர்பான  செய்தி

cri

பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்படுவதை நோக்கிய பல்வேறு திட்டப்பணிகளும், நடவடிக்கைகளும் சீனாவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் நிர்வாக தரப்பின் முயற்சிகள் ஒருபுறம் என்றால் மக்களே இந்த சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொள்ளும் விதமாக, அதன்போது சீனாவுக்கு, குறிப்பாக பெய்சிங்கிற்கு வருகைதரும் வெலிநாட்டு பயணியர்களுக்கு கண்ணியமான, பண்பான நடத்தையின் மூலமும், உபசரிப்பின் மூலமும் சீனப் பண்பாட்டையும், விருந்தோம்பலையும் உணர்த்துவார்கள் என்பது தெளிவாகியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெய்சிங்க் மாநகர மக்களின் கடந்த ஆண்டிலான குடியியல் குறியீடு, அதாவது பண்பாட்டோடும், நாகரீகமும், கண்ணியமும் கொண்ட நடத்தையோடும் செயல்படுவது பற்றிய அளவீட்டில் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன.

சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷா லியன்ஷியாங், கடந்த ஆண்டில் பெய்சிங் மாநகர மக்களிடையே குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், போக்குவரத்து விதிகளை மீறும் செயல்கள் முதலியவை குறைந்துள்ளன என்று கூறுகிறார்.

இவரது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று 2005ம் ஆண்டு நவம்பர் முதல் 2006 நவம்பர் வரையில் 10 ஆயிரம் உள்லூர் பெய்சிங் மாநகரவாசிகள், 2 ஆண்டுகளுக்கு மேல் பெய்சிங்கில் வாழ்ந்துள்ள ஆயிரம் வெளிநாட்டினர் ஆகியோரிடையில் கேள்வி மூல ஆய்வையும், 1 லட்சத்து 80 ஆயிரன் வாகனங்கள் மற்ரும் 2 லட்சத்து 30 பேரை முக்கிய பொது இடங்களிலான மக்களின் செயல்பாட்டிற்காய் கண்கானித்ததன் மூலமான ஆய்வையும் மேற்கொண்டது.