ஷி ச்சியா சுவான் நகரில் மருத்துவச் சேவை
cri
இவ்வாண்டு ஆகஸ்ட் திங்கள் சியென் மின் குடியிருப்புப் பிரதேசத்தில் வாழும் சியெ சு பெஃன் அம்மையார் காச மார்பு அழற்சி நோயால் பீடிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் அவரை வெய் மின் மருத்துவ மனையில் சேர்த்தனர். இது அவருடைய உயிரைக் காட்டாற்றியதுடன் சிகிச்சைக்கான கட்டணத்தையும் குறைத்துள்ளது. அவருடைய தாயார் தை யின் ச்சென் கூறியதாவது.
 இம்மருத்துவ மனை ஏழை மக்களுக்கு சலுகை வழங்குகின்றது. ஏழை நகரவாசிகளுக்கான மருத்துவ சிகிச்சை சலுகை சான்று பத்திரம் எங்களுக்கு அண்மையில் கிடைத்தது. நல்ல வேளையாக என் மகள் மருத்துவ மனையின் சேர்க்கப்பட்டார் என்றார் அவர். ஷ்சியா சுவான் நகர மத்திய மருத்துவ மனையின் துணைத் தலைவர் ச்சுன் வென் வன் கூறியதாவது.
 வெளி நோயாளிகள் முதல் மருத்துவ மனை நோயாளிகள் வரை அவர்கள் ஏழை மக்களாயிலும் சரி சாதாரண நோயாளிகளாயிலும் சரி மருத்துவ சிகிச்சையிலும் பராமரிப்பிலும் எதுவித வித்தியாசமும் கிடையாது. ஏழை நகரவாசிகள் சலுகை கொள்கையை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் சாதாரண நோயாளிகளை விட குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கும் மருத்துவ சிகிச்சை சிறந்து விளங்குகின்றது என்று அவர் கூறினார். உள்ளூர் மருத்துவ மனைகள் நடுத்தர மற்றும் குறைவான வருமானம் பெறும் மக்களின் சங்கட நிலையைக் குறைத்துள்ளது என்றால் மருத்துவ காப்பிட்டு முறைமையின் சீராக்கமும் முழுமைமயமாக்கமும் இத்தகைய மக்களுக்கு மேலும் கூடுதலான சலுகை வழங்க முடிந்தது. ஹு குய் சிளௌ அம்மையார் ஓர் ஏழை பெண்மணி. மருத்துவ சிகிச்சை காப்புறுதி முறையில் சேர்ந்த பின் கருப்பை கழலையால் பீடிக்கப்பட்டிருப்பதாக பரிசோதித்துக் கண்டுபிடிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு 7000 யூவான் செலவளிக்க வேண்டியிருந்தது. ஏழைகளைப் பொறுத்தவரை இது மிகவும் சிரமமானது. இப்போது இப்பிரச்சினை தீர்ந்து விட்டது. அவர் கூறுகிறார்.
 மருத்துவ சிகிச்சைக்காக நான் ஆயிரம் யுவானுக்கும் கூடுதலாக மட்டும் செலவழித்தேன். மருத்துவ சிகிச்சை காப்பீறு எனக்காக 5000 யூவான் செலவழித்தது. இது எனக்கு பேருதவியாக அமைந்தது என்றார். இவ்வாண்டு ஜுன் திங்கள் இறுதி வரை முழு நகரிலும் சுமார் 10 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை காப்புறுதி முறையில் சேர்ந்துள்ளனர் என்று ஷ்சியா சுவான் நகரின் உழைப்பு மற்றும் சமூக காப்புறுதித் துறையின் துணை இயக்குனர் சியொ ஷ் சியெ அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது
 இவ்வாண்டு துவக்கம் நாங்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை காப்புறுதி முறையை எல்லா நகர வாசிகளிடமும் பரவலாக்கியுள்ளோம். அதுவும் கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சிகிச்சை இப்பணியுடன் ஆழமாகி முன்னேறி வருகின்றது. 2008ம் ஆண்டு வரை ஷ்சியா சுவான் நகரவாசிகள் அனைவரும் மருத்துவ காப்புறுதி முறையை அனுபவிப்பர் என்பதை இது குறிக்கிறது என்றார். நேயர்கள் இது வரை ஷ்சியா சுவான் நகர மக்களின் மருத்துவ சிகிச்சை காப்பீட்டு முறை பற்றி கேட்டீர்கள். இத்துடன் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.
|
|