• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-06 15:53:26    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: இலங்கை காத்தான்குடி நேயர் எம். ஐ. எம். நுபைல் எழுதியது. தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். அவ்வமயம் நான் பள்ளியில் தேர்வுகளுக்காய் தயாரித்துக் கொண்டிருந்ததால் எனது கருத்துக்களை எழுதி அனுப்ப முடியவில்லை. பிறக்கும் புத்தாண்டில் சீன வானொலிக் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளார்.

நுபைல் அவர்களே, உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. கல்விச்செல்வம் மிகவும் முக்கியமானது. கவனமாக படித்து வாழ்வில் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்.

க்ளீட்டஸ்: அடுத்து சேலம் நாட்டாமங்கலம் நேயர் வெ. ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கடந்த நவம்பர் 26ம் நாள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நேயர் மன்ற மாநாட்டின் போது சேலம் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் துவக்கப்பட்டதையும், சீன வானொலி பிரதிநிதிக்குழு வாழ்த்துறை வழங்கியதையும் மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார். தமது மன்றத்தின் நிர்வாகிகளாக, ஏ. மாதுராஜ், ஏ. மன்னாதன், ப.மோகனசுந்தரம், ப.ஜவஹர் மற்றும் தானும் பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

கலை: அடுத்து இலங்கை யாழ்பானம் பா. ஈசன் எழுதிய கடிதம். வெளிநாடுகளை பற்றியும் அவற்றின் கலை, கலாச்சாரம், நடையுடை பாவனை பற்ரியும் அறியத்துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான ஊடகமக செயல்பட்டு வரும் சீன வானொலிக்கு நல்வாழ்த்துக்கள். உங்கள் இணையதளத்தையும் பார்வையிட்டேன், நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக கடிதம் எழுதவேண்டும் என்று யோசித்து தற்போதுதான் எழுத முடிந்தது. அறிவிப்பாளர்கள் கலையரசி, கலைமகள், வாணி, மலர்விழி ஆகியோரின் தமிழ் கேட்க இதமாக இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து நீலகிரி கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். நவம்பர் 30ம் நாள் சீனாவில் ஊனமுற்றோரின் வாழ்க்கை பற்றிய செய்தி கேட்டேன். காலில் அறுவை சிகிச்சை செய்து, பின் காலை வெட்டியெடுத்த மாணவியை பற்றி கூறீனீர்கள். தற்போது அவர் பியானோ வாசித்து வருகிறார் என்றும் தன் விடாமுயற்சியால் மேற்படிப்பு மேற்கொண்டுள்ளார் என்றும் கேட்டு வேதனையிலும் மகிழ்ச்சியடைந்தோம். ஊனம் காலில்தானே தவிர மனதில் இல்லை என்று எண்ணினோம். தற்போது இப்பள்ளியில் 500 மாணவ மாணவியகள் படிக்கின்றனர், அவர்களுக்கு ஓவியம், இசை, பின்னல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அறிந்தோம். தமிழ்நாட்டில் கூட ஒரு காலை இழந்த பின் செய்ற்கைக் கால் அணிந்து பரதம் பயின்று திரைப்படங்களிலும் நடித்த நடிகை சுத சந்திரன் யாரும் மறந்திருக்க வாய்பில்லை. கடந்த நவம்பர் 26ம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற நேயர் மண்ற மாநாட்டில் மாணவ மாணவியர் வழங்கிய மூன்று நடனங்கள் சிறப்பாக இருந்தன. அந்த மாணவ மாணவியர் கூட செவிப்புலனற்ற வாய் பேச முடியாத இளம் பிஞ்சுகள் என்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை: அடுத்து திமிரி பி. இ. பத்மாவதி எழுதிய கடிதம். டிசம்பர் 12ம் நாள் ஒலிபரப்பான செய்தித் தொகுப்பில், சின்ன எதிர்நோக்கும் முதியோர்மயமாக்க பிரச்சனை பற்றி கேட்டேன். இன்று நட்டில் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து, 60 வயதுக்கு அதிகமான மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மக்களுக்கு தேவைப்படும் முதியோர் காப்புறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டமை வரவேற்கத்தக்கது. பெற்ற மக்களாலேயே புறக்கணிக்கப்படும் முதியோர்களுக்கு இப்பாதுகாப்பு அவசியமே என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை திருகோணமலை வாசிம் அக்ரம் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்டு வருகிறேன். பயனுள்ள நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பப்படுகின்றன. அதிலும் சீன சமூக வாழ்வு, சீனப் பண்பாடு, சீனக் கதை, நேயர் நேரம். அறிவியல் செய்திகள், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம் சீனம் ஆகிய நிகழ்ச்சிகள் ஆர்வமுடன் நான் கேட்கும் நிகழ்ச்சிகளாகும். சீன நாட்டின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை எல்லாம் கேட்டு அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து சென்னை என். ராஜேந்திரன் எழுதிய கடிதம். டிசம்பர் 20ம் நாள் ஒலிபரப்பான சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் மீனவர்களின் வாழ்க்கையை உணரும் சுற்றுலா என்ற தலைப்பிலான நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் கடற்கைரையில் சுற்றுலா செல்ல்வது பற்ரி கூறும்போது ரசனையோடு அழகாக வாசித்தது அருமை. இத்தகைய சுற்றுலா செல்லும்போது மனதில் உள்ள கவலைகள், குறைபாடுகள் குறைகின்றன என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி சி. சம்பத்குமார் எழுதிய கடிதம். நாள்தோறும் நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டு வருகிறேன். எனது நண்பர்களையும் கேட்குமாறு செய்துள்ளேன். நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களுக்கு என் நன்றிகள். தினந்தோறும் நிகழ்ச்சிகள் நான்கு முறை ஒலிபரப்பாவது புதிய நேயர்களுக்கு வசதியாகவும், பயந்தரும் வகையிலும் அமைந்துள்ளது. சீன இந்திய நட்புறவு மேலும் ஆழமாக சீன வானொலியின் பணிகள் மேலும் சிறப்புடன் அமைய நேயர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் என்று எழுதியுள்ளார்.

கலை: சேந்தமங்கலம் எஸ். ரேகா எழுதிய கடிதம். சிங்காய் திபெத் ரயில்பாதை சீன மக்களின் நீண்டகால கனவாகும். இந்த ரயில் பாதை திறக்கப்பட்டபின், பயணம் செல்லும் மக்கள் அழகான இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தவாறு, மகிழ்ச்சியாக பயணம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பல்வேறு பொருட்களும் இந்த ரயில்பாதையினூடாக கொண்டு செல்லப்படுகின்றன என்பது சிறப்பு என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து நாலுவேதபதி நேயர் என். எழிலரசி எழுதிய நவம்பர் 11ம் நாள் காலை ஒலிபரப்பில் இடம்பெற்ற தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். நிகழ்ச்சியின் மூலம் நாளை, நாளை மறுநாள், நேற்று, நேற்று முன் தினம் என்பதையெல்லாம் எப்படி சீன மொழியில் சொல்வது என்பதை அறிந்துகொண்டோம். அது மட்டுமல்ல நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, நேற்று செவ்வாய் கிழமை, அடுத்த ஆண்டு, கடந்த ஆண்டு போன்றவற்றையும் சீன மொழியில் கூறுவது என்பதையும் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.