• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-07 09:32:35    
பழைய வீட்டுக்கு பிரியா விடை

cri

தற்காலிக வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளின் சீரமைப்புப் பணி கடும் இன்னல்களை எதிர்நோக்கியது. ஆனால், லியௌ நிங் மாநில அரசு மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. வெற்றிகரமாக திரட்டப்பட்ட300 கோடி யுவான் மூலதனம், சீரமைப்புப் பணிக்கு ஆதரவளிக்க, பல்வேறு நகரங்களுக்கு பங்கிடப்பட்டது.

2005ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லியௌ நிங் மாநிலத்தில் 50 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேலான நிலப்பரப்புடைய தற்காலிக வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளின் சீரமைப்புப் பணி, முதலில் பு சுன் நகரில் மேற்கொள்ளப்பட்டது. 7 மாத கால கட்டுமானத்துக்குப் பின், முதல் காலக்கட்டச் சீரமைப்புத் திட்டப்பணி முடிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் இறுதியாக பாழடைந்த ஒற்றை மாடி வீடுகளுக்குப் பிரியா விடை கொடுத்து, விசாலமான, ஒளி நிறைந்த, வசதிகளை முழுமையாகக் கொண்ட புதிய கட்டிடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். நிலக்கரிச் சுரங்கத்தில் ஈடுபட்ட பழைய தொழிலாளர் யுவான் சிங் ஹுவா கூறியதாவது—

"குடிபெயர்ந்த நாள் குறிப்பிடத்தக்கது. எனது மகன் பட்டாசு வாங்கினார். எனது மருமகனும் இரண்டு மகன்களும் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது எனது மனநிலை உண்மையிலேயே உணர்வுப்பூர்வமானது. கண்ணீர் வழிந்தது. அரசு, முதியோர்கள் அமைதியாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் முதுமைக்காலத்தை அனுபவிக்கச் செய்கிறது. நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார் அவர்.

சென் யாங், தான் துங், யிங் கோ, பென் சி உள்ளிட்ட மற்ற நகரங்களில், மகிழ்ச்சியான குடிபெயர்வுக் காட்சிகள் எங்கெங்கும் காணப்படலாம்.

2006ஆம் ஆண்டில் லியௌ நிங் மாநிலத்தின் இந்தச் சீரமைப்புப் பணி நல்ல வளர்ச்சிப் போக்கை நிலைநாட்டியுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலான குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் புதிய வீடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்.


1 2