• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-07 10:34:23    
தமிழ் மூலம் சீனம் பாடம் 71

cri

ராஜா.....கலை நாம் கடந்த வகுப்புகளில் வெவ்வேறு மதிப்புள்ள சீன பணம் பற்றிக் கற்றுக் கொண்டோம்.

கலை......ஆமாம். ராஜா இப்போது சீன பணத்தின் மதிப்பு மற்றும் அளவு பற்றி நன்றாக தெளிவாக புரிந்து கொண்டீர்களா?

ராஜா......ஆமாம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் சீன நாணயம் பற்றி ஒழுங்கான முறையில் கற்றுக் கொண்டது எனக்கு நாள்தோறும் கடைவீதியில் உதவியாக இருக்கின்றது.

கலை.......அப்படியானால் நாம் இன்றைய வகுப்பில் பணத்தை கொண்டு பொருட்களை வாங்கும் பயிற்சியைச் செய்யலாமா?

ராஜா......செய்யலாமே.

கலை......நான் கடைக்காரர் என்ற முறையிலும் நீங்கள் பொருள் வாங்க வந்தவர்கள் முறையிலும் உரையாடலாமா?

ராஜா......மகிழ்ச்சி. உரையாடலை துவக்கலாம்.

கலை.......கொஞ்சம் பொறுங்கள். உரையாடலை துவக்குவதற்கு முன் இது தொடர்பான புதிய சொற்களை முதலில் கற்றுக் கொள்வோம்.

ராஜா.......... ஒ. அதை மறந்து விட்டேன். சரி சொல்லுங்கள்.

கலை........தியன், பு, மீ, குய், பியன் யி, மைய் என்ற ஆறு சொற்களை கற்றுக் கொள்ளலாம்.

ராஜா.....கலை தியன் என்றால் என்ன?

கலை.......தியன் என்றால் கடை என்று பொருள்.

ராஜா.....பு என்றால் என்ன?

கலை.....பு என்றால் துணி.

ராஜா.......மீ என்பது பற்றி நாம் ச்சாங் சன் யு தோ ச்சாங் என்ற பாடத்தில் கற்றுக் கொண்டோமே. அது தானா?

கலை......ஆமாம். அதுதான். நீளம் பற்றி பேசும் போது மீ என்று குறிப்பிடுகின்றோம். ஆகவே இனிமேல் நீளம் என்று குறிப்பிடும்போது மீ என்று சொல்லலாம்.

ராஜா.......குய் என்றால் என்ன பொருள்?

கலை......குய் என்றால் விலை அதிகம் என்று பொருள்படுகின்றது.

ராஜா......என் மனதில் பதிந்து விட்ட தை குய் லா என்ற வாக்கியம் நினைவிக்கின்றது. அந்த குய் இப்போது கற்றுக் கொள்கின்ற குய் இரண்டும் ஒரே அருத்தம் தானா?

கலை.......ஆமாம். குய் என்றால் விலை அதிகம். தை குய் லா என்று கூறினால் விலை மிகவும் அதிகம் என்று கூறலாம்.

ராஜா........பியன் யி என்று கூறினால் தமிழில் என்ன அர்த்தம்?

கலை......பியன் யி என்று கூறினால் தமிழில் மலிவு என்று பொருள்.

ராஜா......மைய் என்றால் என்ன பொருள்?

கலை......மைய் என்றால் தமிழில் வாங்கு என்று பொருள்படுகின்றது.

ராஜா......நான் முதலில் தியன், தியன், பு, பு, மீ, மீ, குய், குய், பியன் யி, பியன் யி, மைய், மைய் என்று உச்சரிப்பது சரிதானா?

கலை......மிக தெளிவானது. நன்றாக சீக்கிரமாக கற்றுக் கொண்டுள்ளீர்களே. ராஜா.

ராஜா.......கலை பாராட்டுவதற்கு மிக்க நன்றி.

கலை.....ராஜா நாம் உரையாடலை துவக்குவோம். நான் சீன மொழியில் பேசுகின்றேன். நீங்கள் என்னை பின்பற்றி சொல்லுக்கு சொல் தமிழில் பேசுங்கள்.

ராஜா.....சரி நான் பின்பற்றுகின்றேன்.

கலை....... நி ஹாவ். ச்செ லி ஸ் பு தியன்.

ராஜா.......வணக்கம். இங்கே துணி கடை இருக்கின்றது?

கலை......ச்சின் வென். நி யோ மைய் பு மா?

ராஜா.......நீங்கள் துணி வாங்க வேண்டுமா?

கலை........நி யோ மைய் ஜி மி பு?

ராஜா......எவ்வளவு மீட்டர் துணி நீங்கள் வாங்க வேண்டும்?

கலை......யோ மைய் லியூ மி பு.

ராஜா......நான் ஆறு மீட்டர் துணி வாங்குகின்றேன்.

கலை.......யி மி பு யோ தோ ஷௌ ச்சியன்?

ராஜா......ஒரு மீட்டர் துணிக்கு விலை என்ன?

கலை.......யி மி பு யோ ஷ் குவய் ச்சியன்.

ராஜா.....ஒரு மீட்டர் துணிக்கு பத்து யுவான்.

கலை.......தை குய் லா.

ராஜா......விலை மிகவும் அதிகம்.

கலை......பூ குய். நி யோ தோ ஷௌ மி பு?

ராஜா......விலை அதிகம் இல்லை. உங்களுக்கு எத்தனை மீட்டர் துணி வேண்டும்?

கலை........வோ யோ லியூ மி பு.

ராஜா.........எனக்கு ஆறு மீட்டர் துணி தேவை.

கலை...... ஹோ, சான் ஷ் குவய் ச்சியன் மைய் லியு மி பு. வோ ஷௌ யோ வூ குவய் ச்சியன்.

ராஜா......சரி, ஆறு மீட்டர் துணிக்கு நான் உங்களிடம் 30 யுவான் கேட்கின்றேன். 5 யுவான் தள்ளுபடி தருகின்றேன்.

கலை......ஹோ வோ மைய் லா.

ராஜா......சரி நான் வாங்குவேன்.

கலை......நண்பர்களே. இந்த உரையாடலை ஒரு முறை கேட்டு தெளிவாக புரிந்து கொண்டீர்களா?

ராஜா......கலை இப்படியே கற்றுக் கொள்வது கொஞ்சம் விரைவாக இருக்கின்றது. நாம் மெதுவாக இந்த வாக்கியங்களை இன்றைய வகுப்பில் மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யலாமா?

கலை.....தாராளமாக. நாம் மெதுவாக உரையாடுவோம்.

ராஜா......நான் முதலில் சொல்லட்டுமா?

கலை......சொல்லுங்கள்.

ராஜா....... நி ஹாவ் ச்செ லி ஸ் பு தியன்.

கலை..........வணக்கம். இங்கே துணி கடை இருக்கின்றது?

ராஜா......ச்சின் வென். நி யோ மைய் பு மா?

கலை.......நீங்கள் துணி வாங்க வேண்டுமா?

ராஜா........நி யோ மைய் ஜி மி பு?

கலை......எவ்வளவு மீட்டர் துணி நீங்கள் வாங்க வேண்டும்?

ராஜா......வோ மைய் லியூ மி பு.

கலை......நான் ஆறு மீட்டர் நீளம் துணி வாங்குகின்றேன்.

ராஜா........யி மி பு யோ தோ ஷௌ ச்சியன்?

கலை.....ஒரு மீட்டர் துணிக்கு விலை என்ன?

ராஜா.......யி மி பு யோ ஷ் குவய் ச்சியன்.

கலை.....ஒரு மீட்டர் துணிக்கு பத்து யுவான்.

ராஜா.......தை குய் லா.

கலை......விலை மிகவும் அதிகம்.

ராஜா......பூ குய். நி யோ தோ ஷௌ மி பு?

கலை......விலை அதிகம் இல்லை. உங்களுக்கு எத்தனை மீட்டர் துணி வேண்டும்?

ராஜா........வோ யோ லியூ மி பு.

கலை.........எனக்கு ஆறு மீட்டர் துணி தேவை.

ராஜா...... ஹோ, சான் ஷ் குவய் ச்சியன் மைய் லியு மி பு,. வோ ஷௌ யோ வூ குவய் ச்சியன்.

கலை......சரி, ஆறு மீட்டர் துணிக்கு நான் உங்களிடம் 30 யுவான் கேட்கின்றேன். 5 யுவான் தள்ளுபடி தருகின்றேன்.

ராஜா......ஹோ வோ மைய் லா.

கலை.........சரி நான் வாங்குவேன்.

ராஜா.....நண்பர்களே. இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் இந்த பயிற்சி தொடர்வோம்.

கலை........வணக்கம் நேயர்களே.