• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-08 15:05:17    
ச்சேன் பேய் பாவ் என்னும் திரைப்பட நகரம்

cri

ச்சிங் நகரத்தை விட, மிங் நகரத்தில் மஞ்சள் மண்ணால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் மிகவும் அதிகம். சிவப்புச் சோளம் என்னும் திரைப்படத்தில், மதுக் கடவுளை வழிப்படும் காட்சி, இவ்வரணில் இன்னும் இருக்கிறது. காற்றில், திரைப்படத்திலுள்ள சோள மதுவின் நல்ல வாசனை வீசுகிறது.
லீ ஜியுன் என்னும் பயணி, நிழற்படத்தை எடுத்தப் பிறகு கூறியதாவது:
சீனாவின் தென் பகுதியை விட, இங்கு காட்சிகள் வேறுபட்டவை. எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.


ச்சேன் பெய் பாவ்வின் பழைய அரணின் வடக்கே 200 மீட்டர் தொலைவில், புதிய அரண் உள்ளது. இது, ச்சிங் நகரமாகும். அதன் நகரச் சுவர் ஒப்பீட்டளவில் முழுமையாக இருக்கிறது.
ச்சிங் நகரத்தில் நுழைந்த பின், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி வீதியைக் காணலாம். பண்டைக்காலத்தின் இறைச்சிக் கடை, வங்கி, தேநீர் கடை, துணிக்கடை, முதலிய சீனாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றுடைய வீதிக் காட்சிகள் இங்கு உள்ளன. இந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரம் இலவசமாக வழங்கிய காட்சிகள், பொருட்கள், சட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல பயணிகள், திரைப்பட நடிகர்களைப் போன்று, தாங்களே தமது வீடியோ கருவிகளைக் கொண்டு குறுந்திரைப்படங்களை உருவாக்குகின்றனர். கிழக்குச் சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் பயணி JIANG HAI FENG மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:

 
நிங்சியாவுக்கு வரும் போது, இந்தத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரத்தைப் பார்வையிட வேண்டும் என கேள்விப்பட்டேன். இங்கு, ச்சிங் மற்றும் மிங் வம்சத்தின் பண்டைக்கால காட்சிகள் உள்ளன. பெரிய நகரத்தில் பார்க்காத பொருட்களை, இங்கே காணலாம். திரைப்படத்தில் பார்த்த பொருட்களையும், இங்கே கண்டறிய முடியும் என்றார் அவர்.
ச்சிங் நகரத்தின் சுவரில், நிங்சியாவின் வடபகுதியிலுள்ள HE LAN மலையைப் பார்க்கும் போது, பண்டை அரணின் அழகிய காட்சிகள், கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

பண்டைக்கால மற்றும் தற்போதைய, சீன மற்றும் வெளிநாட்டு திரைப்படக் கதைகள் இன்னும் இங்கே திரைப்படங்களாக்கப்பட்டு வருகின்றன. ச்சேன் பெய் பாவ், அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கின்றது.
அடுத்து, ச்சேன் பெய் பாவ் வில் பயணம் மேற்கொள்ளும் போது, சில சுற்றுலாத் தகவல்கள்:
ச்சேன் பெய் பாவ்வுக்குச் செல்லும் போக்குவரத்து மிகவும் வசதியானது. யீன் சுவான் நகரத்தின் மேற்கு வாயிலிலிருந்து பேருந்து மூலம் திரைப்பட நகரத்துக்கு நேரடியாக வரலாம். திரைப்பட நகரத்தின் நுழைவுச்சீட்டு விலை, 40 யுவானாகும். இதற்கு இலவச வழிக்காட்டிச் சேவை இருக்கிறது.


நேயர்கள் இதுவரை, நிங்சியா ஹுவே இனத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகரம் என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய சீனாவில் இன்பப் பயணம் என்னும் நிகழ்ச்சி நிறைவடைகிறது.