தற்போது திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவரின் எண்ணிக்கை 5 லட்சத்து 38 ஆயிரத்தை அடைந்துள்ளது. துவக்க பள்ளி மாணவர்கள் பள்ளியில் சேரும் விகிதம் 96 விழுக்காட்டை அடைந்துள்ளது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியாங்பாபாங்கோ 8ம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.
திபெத்தின் பல மாற்றங்களில், கல்வி வளர்ச்சி நீண்டகால செல்வாக்கு கொண்டது. இது மக்களால் பாராட்டப்படுகிறது. கடந்த காலத்தில், திபெத்தில் நவீன கல்வி இல்லை. எழுத்தறிவற்றவர்கள் மக்களில் 95 விழுக்காடு வகித்தனர். 50 ஆண்டுகால முயற்சி மூலம், திபெத்தில் குழந்தைகளுக்கான கல்வி, அடிப்படைக் கல்வி, உயர் நிலைக்கல்வி, தொழில் முறை கல்வி, சிறப்புக் கல்வி, வயதுவந்தோர் கல்வி உள்ளிட்ட கல்வி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
|