ஆண்-பெண் சமம் என்னும் அடிப்படை தேசிய கொள்கை. சமூக பொருளாதார வளர்ச்சியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆண் பெண் சமம் என்ற நிலையில் பெண்களின் குறிக்கோள் மேலும் வளர்ச்சி பெறத் தூண்ட வேண்டும் என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர குழுவின் துணை தலைவரும், சீன தேசிய மகளிர் சம்மேளனத்தின் தலைவருமான gu xiu lian கூறினார்.
சீன தேசிய மகளிர் சம்மேளனம் வெளியிட்ட இந்த பச்சை நிற அறிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக சீன மகளிர் வளர்ச்சி நிலைமையை முழுமையாக விளக்கி கூறுகிறது. 1995ம் ஆண்டு முதல், ஆண் பெண்் சமத்துவம் என்பதை சீனா ஒரு அடிப்படை கொள்கையாகப் பின்பற்றி, மகளிர் வளர்ச்சியை ஊக்குவித்து அவர்களின் உரிமையையும் நலனையும் பேணிகாக்கிறது. ஆண் பெண் சமம் என்பதற்கு, பயனுள்ள பாதுகாப்பு அமைப்பு முறையையும், சிற்ந்த சமூக சூழலையும் வழங்குகிறது என்று gu xiu lian கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் ஆண்-பெண் சமத்துவமும், சீன மகளிர் வளர்ச்சி நிலைமையும், தெள்ள தெளிவாக மேம்படுத்தபட்டுள்ளது. மகளிர் கல்வியளவு பெருமளவில் உயர்ந்துள்ளது. உடல் நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவை, தெளிவாக மேம்பாடு கண்டுள்ளது. திருமணம் செய்ததற்கு பின், குடுபத்தில் பெண்ணின் தகுநிலை மேலும் சமமாகியுள்லது. அவர்களுக்கான வேலை வாய்ப்பு உரிமை பேணிகாக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சமூக நிர்வாகத்தில் பெண் பங்கேற்பது மேலும் உயர்ந்துள்ளது ன்றார். 1995ம் ஆண்டு முதல், கருத்தரித்த பெண்களின் இறப்பு விகிதம், 1 லட்சத்திற்கு 62 மரணம் என்பதில் இருந்து 48 மரணங்களாக குறைந்துள்ளது. அதேவேளையில், பொருளாதாரம் முதலிய துறைகளில் சீனப் பெண்கள் பெற்றுள்ள உரிமையும் தகுநிலையும் அதிகரித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரி, 9 விழுக்காட்டு கேகத்துடன் அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்துள்ள பயனை சீன மகளிர் முழுமையாக பெற்றுள்ளனர். அதே வேளையில், பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாகக் கலந்துக் கொள்வதன் மூலம், தமது உணர்வையும், சமூக தகுதியையும் உயர்த்தியுள்ளனர். இந்த மாற்றம், சீனாவின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் காணப்படலாம்.
சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள உள் மன்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில், பழைய பாரம்பரிய கண்ணோட்டத்தில், மகளிர் குடும்பத்திலிருந்து வெளியேறி, பணிபுரிந்து பணம் சம்பாதிப்பது என்பது, நல்லது அல்ல என்று கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்த கருத்து படிப்படியாக மாறியுள்ளது. பல பெண்கள் வெளியில் சென்று பணி புரிந்து பணம் சம்பாதிறார்கள்.
|