• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-09 13:35:55    
ஏ வென் க் இனமும் கலைமானும்

cri

இலையுதிர்காலத்தில் எமது செய்தியாளர் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு தகவல் சேகரிக்கச் சென்றார். ஒரு நாள் அதிகாலையில் வெப்பமான சூரிய ஒளி அங்குள்ள அமைதியான வெள்ளை பூர்ச்ச மர காட்டில் வீசுகின்றது. சுற்றுப்புறங்கள் மனதிற்கு நிம்மதி தருகின்றன. திடீரென, இடையிடையே ஒலிக்கும் மணியோசை, நமது கண்பார்வையை இக்காட்டின் ஆழத்தின் மீது திசைதிருப்புகின்றது. அங்கு, கலைமான்கள் கூட்டமாக, உற்சாகமாக மலைப்பாதை ஓரத்திலுள்ள ஒரு கூடாரத்தை நோக்கி ஓடுகின்றன. மணிஓசை, இக்கூடாரத்தின் பெண் உரிமையாளர் மாலுசா அம்மையாரை வெளியேவரச் செய்தது. 30க்கும் அதிகமான கலைமான்கள், அம்மையாரைச்சூழ நிற்கின்றன. சில கலைமான்கள், போக்கரித்தனமாக அவற்றின் முன் கால்களை, மா லு சாங்கின் கைகளைத் தொட எம்மிய வண்ணம் இருந்தன. "செ" "செ" "செ" என்ற மாலுசாவின் குரலைக்கேட்டு, கலைமான்கள் கூடாரத்தின் இருபக்கங்களிலும் பணிவுடன் தரைப்பட்டன.

"Canvas" என்னும் ஒரு வகைத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த கூடாரம், மா லு சாவின் வீடு ஆகும். உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் இக்குடும்பத்தினர்கள், ஏ வென் க் இனத்தைச்சேர்ந்தவர்களாவர். இவ்வீடு, ஏ வென் க் வட்டத்தில் அமைந்துள்ளது. வீட்டின் உரிமையாளர், அதாவது மா லு சாங்கின் கணவன் அ லுங் புக்கு இவ்வாண்டு 57 வயது. செய்தியாளரிடம் பேசுகையில், ஏ வென் க் இனத்தவர்கள் தலைமுறைத் தலைமுறையாக கலைமான்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். கலைமான்கள், தத்தமது குடும்பத்தின் உறுப்பினர்களாக இருப்பது போல் இருக்கின்றன என்று அவர் கூறினார்.

"ஏ வென் க் இன மக்களுக்கு, கலைமான் இல்லாமல், பணியாளர்கள் பணியை இழப்பது போன்ற உணர்வு ஏற்படும். கலைமான்கள் இல்லாது போனால், எங்கள் இனமும் கலைந்து விடும்" என்றார், அவர்.

ஏ வென் க் இனம், சீனாவில் குறைவான மக்கள் தொகையுடைய ஒரு தேசிய இனமாகும். சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட இவ்வினத்தவர்கள் முக்கியமாக உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம், ஹேலுங்சியாங் மாநிலத்தை ஒட்டியமைந்துள்ள காட்டு மண்டலத்தில் குழுமி வாழ்கின்றனர். அ லுங் பு குடும்பம் தங்கும் Ao Lu Gu Ya வட்டத்தில் இரு நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளனர். முன்பு, ஏ வென் க் இன மக்கள், வேட்டையாடுதல், கலைமான் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தினர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், அவர்கள் குடியேற்ற வாழ்வை நடத்தத் துவங்கினர். மூன்று ஆண்டுகளுக்கு முன், அ ழுங் பு குடும்பம் இதர வட்டாரத்தினர்களுடன் வேட்டையாடுதல் வாழ்க்கையை விட்டு நகரத்தின் புறப்பகுதியில் குடியேறியது.

இருப்பினும், இத்தம்பதியினரை காட்டில் சந்தித்தோம். காரணம் என்ன? கலைமான்கள் தொழுவத்தில் வளர்க்கப்படத் துவங்கியது முதல், பல கலைமான்கள் நோய்வாய்பட்டன. வேறு வழியில்லாமல், இக்குடும்பம் மீண்டும் மலையில் குடியேற வேண்டியிருந்தது.