• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-09 13:54:26    
ஒலிம்பிக் செய்திகள்

cri

பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிய பெய்சிங் மாநகர் வாழ் மக்களிடமும், பெய்சிங்கின் புறநகர் பகுதிகளில் வாழும் மக்களிடமும் விண்ணப்பங்கள் வரவேற்கபட்டமை நாம் அறிவோம். இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளதென பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் இறுதி வரையில் வந்து சேர்ந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 லட்சத்து 50 ஆயிரம். இதில் பெய்சிங் மாநகரவாசிகளது விண்ணப்பங்கள் 2 லட்சத்து 50 ஆயிரம், அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் அனுப்பப்பட்டுள்ளன.

பெய்சிங் மாநகருக்கு வெளியே வசிப்பவர்களிடமிருந்து ஏறக்குறைய 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது 70 ஆயிரம், பாரலிம்பிக்கிஸ் எனப்படும் உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் போது 30 ஆயிரம் என மொத்தம் 1 லட்சம் மட்டுமே. இதனிடையில் இம்மாத இறுதி வாகில் ஹாங்காங், மக்காவ், தைவான் ஆகிய வகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தன்னார்வத் தொண்டு புரிய வாய்ப்பளிக்கும் வகையில் அவர்களிடமிருந்தான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படும். அதைத் தொடர்ந்து உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தன்னார்வத் தொண்டர்களின் முதல் அணி தேர்வு செய்யப்படும். இவாணிட்ல் நடைபெறும் சோதனை போட்டிகளின் போது அவர்கள் தன்னார்வத் தொண்டாற்றத் தொடங்குவர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் அல்லது அனுமதிச் சீட்டுகளின் விற்பனை தொடங்கும். சீன நாட்டினரும், சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினரும் இந்த நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்காக இதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் முதற்கட்ட விற்பனை ஆரம்பமாகும். மூன்று கட்டங்களாக பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனை அமையும் என்று பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.