|
ஜெர்மன் ஓபன் பூப்பந்து போட்டி
cri
|
 சர்வதேச பூப்பந்து விளையாட்டு கூட்டமைப்பின் ஜெர்மன் ஓபன் பூப்பந்து போட்டியில் சீன அணி நான்கு பட்டங்களை வென்று தனது அதீத திறமையை மீண்டும் என்பித்துள்ளது. சீன அணி ஆடவர் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளிலும், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி வாகை சூடியது. ஆடவர் இரட்டையர் போட்டியில் தென் கொரியா பட்டம் பெற்றது. பூப்பந்து போட்டியின் தரவரிசையில் கடந்த செப்டம்பர் 28ம் நாள் முதல் தொடர்ந்து 22 வாரங்கள் முதலிடத்தில் உள்ள சீனாவின் லின் டான் அவரது தோழியும் காதலியுமான பெண்கள் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் நிற்கும் சியே சிங்ஃபாங் ஆகிய இருவரும் இவ்வருடத்தில் பெற்ற இரண்டாவது பட்டம் இதுவாகும். இருவரும் கடந்த ஜனவரியில் தென் கொரியாவில் நடைபெற்ற போட்டிகளிலும் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|