பெய்சிங்கிற்கு மேற்கே 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள He Bei மாநிலத்தின் Cao Fei Dianவில், சீனாவின் மிகப் பெரிய இரும்புருக்குத் தளத்தின் கட்டுமானத் திட்டப்பணி துவங்கியது. 2010ஆம் ஆண்டுக்குள், பெய்சிங்கில் சீன Shou Du இரும்புருக்கு குழுமத்தின் இரும்புருக்கு உற்பத்தி நிறுத்தப்படும். இன்று பெய்சிங்கில் இக்குழுமம் நடத்திய புதிய தளக் கட்டுமானம் தொடர்பான விழாவில், இது அறிவிக்கப்பட்டது. Cao Fei Dianக்கு Shou Du இரும்புருக்கு குழுமம் நகர்த்தப்படுவது, சுற்று வட்ட பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான சீன அரசின் நடவடிக்கையாகும். 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வரவேற்க, பெய்சிங் மாநகர், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் உகந்த நடவடிக்கையுமாகும். ஒட்டுமொத்த திட்டத்தின் படி, 2010ஆம் ஆண்டில் புதிய தளம் உற்பத்தியில் இறங்கும். அப்போது, புதிய தளம், சீனாவின் மிகப் பெரிய இரும்புருக்கு தளமாக மாறும்.
|