புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலின் வளர்ச்சி
cri
புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை சீனா ஆக்கப்பூர்வமாக தூண்டி, சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு, சிறிய ரக மீத்தேன் வாயு மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு மாதிரிகளின் மூலம், மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களின் உயிரின வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துகின்றது என்று சீனத் துணை வேளாண் துறை அமைச்சர் Wei Chao An கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் "புதிய கிராமங்களும், புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலும்" என்னும் சர்வதேசக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார். புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் சீன அரசு கவனம் செலுத்தி, கிராமங்களில் தூய்மையான எரியாற்றலை ஆக்கப்பூர்வமாக வளர்க்கின்றது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு, கிராமங்களில் மீத்தேன் வாயு பயன்பாட்டைப் பரவல் செய்ய, நடுவண் அரசு 250 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றில், மொத்த முதலீட்டுத் தொகையின் 50 விழுக்காட்டுக்கு மேலான நிதி, மத்திய மற்றும் மேற்குப் பகுதிக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
|
|