• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-13 10:43:23    
இன்னொரு காளான் வருவல்

cri


வாணி -- இன்றைய நிகழ்ச்சியில், இன்னொரு வகை காளான் வறுவல் தயாரிப்பது பற்றி நாம் காண இருக்கின்றோம்.

க்ளீட்டஸ்-- தற்போது, சீன வகை உணவில் நமது நேயர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு இதை எடுத்துக் காட்டுகின்றது.

வாணி -- உண்மையில், இது மகிழ்சசிக்கு உரியது தான். இப்போது, காளான் பற்றி ஓரிரு தகவல், எபிகூரஸ் என்பவர், தத்துவஞானி, இன்பத்தை அடைவதே, ஒருவரின் செயலுக்கு அடிப்படை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர் அவர். ஆனால், விஷத் தன்மை வாய்ந்த காளான்களை உண்டதால், அவர் உயிரிழந்தார். இறக்கும் தறுவாயில் அவர் என்ன கூறினார் தெரியுமா? காளான்களைத் தின்றதன் மூலம் கிடைத்த இன்பம் காரணமாக, உயிரிழப்பது ஏற்புடைத்தே என்றார் அவர்.

க்ளீட்டஸ் -- அப்படி என்றால், காளான் விஷத் தன்மை வாய்ந்தது என்று கூற முடியுமா?

வாணி -- அப்படியில்லை. விஷத் தன்மை வாய்ந்தது, மருத்துவக் குணம் மிக்கது, சத்து மிக்கது, சுவை மிக்கது, எனப் பல பிரிவுகளைச் சேர்ந்த காளான், காய்கறி வகையில் சேர்க்கப்படுவது கிடையாது என்பது மற்றொரு தகவல். ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர். B வைட்டமின் நிறைந்தது, புரதச் சத்து மிக்கது. கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது இந்தக் காளான்.

க்ளீட்டஸ் -- அப்படியானால், பயப்படத் தேவையில்லை, அல்லவா?

வாணி -- ஆமாம். உண்பதற்கான பல வகை காளான் இன்று பல நாடுகளில் கிடைக்கின்றது.

க்ளீட்டஸ் -- சரி. நிகழ்ச்சிக்கு வருவோமா?

வாணி -- கண்டிப்பாக. இன்று நாம் பயன்படுத்த இருப்பது, வெண்ணிறக் காளான்.

பட்டன் வடிவத்தில் காணப்படுவது.

தேவையானவற்றின் பட்டியல் இதோ,

வெண்ணிறக் காளான் – 500 கிராம்

வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், உப்பு

மிளகுத் தூள் – தேவையான அளவு

க்ளீட்டஸ் -- காளான் மட்டுமே விலை அதிகமானது என்று நினைக்கின்றேன்.

வாணி -- ஆமாம். இனி, செய்முறைக்கு வருவோம். குளிர்ந்த நீரில் காளான்களை நன்றாகச் சுத்தம் செய்து, காம்புகளை நறுக்கி எறிய வேண்டும். பிறகு, மெல்லிய தூண்டுகளாக காளான்களை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

க்ளீட்டஸ் -- அதாவது, வறுப்பதற்கு ஏற்றவகையில் துண்டு போட வேண்டும், அப்படித் தானே?

வாணி -- ஆமாம், இப்போது, அடுப்பின் மீது வாணலியை வைத்து, தேவையான அளவு வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை அதில் ஊற்றவும். சற்றே காய்ந்த பிறகு,

காளான் தூண்டுகளை அதில் கொட்டி, நன்கு வறுக்க வேண்டும். உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து, பதமாகும் வரை வறுக்க வேண்டும்.

க்ளீட்டஸ் -- எத்தனை நிமிடம் வரை என்று கூற முடியுமா?

வாணி -- 3 முதல் 4 நிமிடம் வரை தேவைப்படலாம். உடனடியாகப் பரிமாறினால், சுவை குன்றாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.