• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-13 16:24:09    
வறியப் பிரதேசங்களில் மருத்துவ வசதியின் மேம்பாடு

cri

ராஜா.....சீனா ஒரு வளரும் நாடு. அதற்கு பரந்து விரிந்த நிலப்பரப்பு உண்டு. மருத்தவ சுகாதார வசதிகளில் கிழ்க்கு சீனாவுக்கும் மத்திய மற்றும் மேற்கு சீனாவுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்கள்?கலையரசி.

 
கலை......ராஜா, நீங்கள் ஒரு நல்ல கேள்வி கேட்டீர்கள். நீங்கள் கூறியது போல் சீனா பரந்து பட்ட நிலப்பரப்பு கொண்டிருப்பதால் அதன் பல்வேறு பகுதிகளிலும் வளர்ச்சி நிலை வேறுபட்டிருக்கின்றது. சீனாவின் கிழக்கு பகுதி மாநகரங்களில் மக்களின் வாழ்க்கை ஏற்கனவே வளம் பெற்றுள்ளது. எனிலும் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள சில பிரதேசங்களில் மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும் மருத்துவ வசதிகள் கிழ்ககு பகுதியிலிருந்து வெகுவாக வேறுபட்டிருக்கின்றன. சீனாவின் பின் தங்கிய வட்டாரங்களில் நோய்வாய்படுவது, மக்களுக்கு பெரும் அச்சம் தரும் பிரச்சினைகளில் ஒன்றாகும். பலர் நோய்வாய்பட்டால் பண காரணங்களால் மருத்துவரைப் பார்க்க முடியாமல் தத்தளிப்பார்கள். பணம் இருந்தாலும் ஊரில் எளிய மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவர்களும் இல்லாத காரணத்தால் அவர்களால் தக்க சமயத்தில் சிகிச்சை பெற முடியவில்லை.
ராஜா.......பின்தங்கிய மக்களின் மருத்துவ சிகிச்சை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சீன அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

 
கலை.......குய்சோ மாநிலத்தின் பான் சியென் மாவட்டம் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவின் மிகவும் பின்தங்கிய வட்டாரமாகும். இங்கு உள்ள மக்களின் தனி நபர் தேசிய பொருளாதார உற்பத்தி சுமார் 500 அமெரிக்க டாலராகும். சீனாவின் சராசரி தேசிய பொருளாதார உற்பத்தி மதிப்பில் இது பாதி மட்டுமே. மக்கள் மருத்துவரைப் பார்ப்பதற்கு பணம் கிடையாது. இந்த இன்னலைத் தீர்ப்பதற்கு பான் சியென் மாவட்ட அரசு 2005ம் ஆண்டு புதிய ரக கிராமிய கூட்டுறவு மருத்துவ முறையை செயல்படுத்த துவங்கியுள்ளது.
ராஜா......அந்த நடவடிக்கைகள் எப்படி நடைமுறைக்கு வந்துள்ள?இது பற்றி சொல்ல முடியுமா?

 
கலை.......ஓ முடியும். பான் சியென் மாவட்டத்தின் தற்காலிக தலைவர் லொ ச்சி சியாங் கூறியதைப் பார்ப்போம். அவர் கூறியவாது............................உரை 1..................
ராசா.......எங்கள் மாவட்டம் நாட்டின் புதிய ரக கிராமிய கூட்டுறவு மருத்துவ முறையின் சோதனை மாவட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நோயுள்ள காரணத்தால் மீண்டும் ஏழைகளாகும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு இந்தக் கொள்கையை செயல்படுத்துகின்றது. சுருங்கக் கூறினால் பொது மக்கள் இக்கொள்கைக்கு பெரும் ஆதரவளிக்கிறார்கள். பொது மக்களைப் பொறுத்த வரை இது தலைசிறந்த கொள்கை என அவர்கள் கருதுகிறார்கள் என்றார் அவர்.
கலை........இந்தக் கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்து கொண்ட ஒவ்வொரு விவசாயிக்கும் மத்திய அரசு ஆண்டுதோறும் 20 யுவானும் உள்ளூர் அரசு 20 யுவானும் விவசாயி 10 யுவானும் வழங்கி கூட்டுறவு மருத்துவ சிகிச்சை நிதியாக உருவெடுத்துள்ளனர். விவசாயிகள் நோய்வாய்ப்பட்டால் குறிப்பிட்ட அளவு மருத்துவ செலவை அரசிடம் இருந்து திரும்பப் பெறலாம். இது வரை இம்மாவட்டத்தில் 78.5 விழுக்காட்டு விவசாயிகள் இந்த கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்துள்ளனர்.
ராஜா......இதற்கு ஓர் உதாரணத்தை நம் நேயர்களிடம் கூற முடியுமா?

 
கலை.......ஓ முடியும். லீ காய் சியாங் எனும் முதியோர் வயிற்றுப் புண் நோயால் பீடிக்கப்பட்டார். இது வரை 2200 யுவான் செலவழித்தார். கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்ததால் மருத்துவக் கட்டணம் ஆயிரம் யுவான் குறைக்கப்பட்டது. இதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தம் குடும்பத்தினர் புதிய ரக கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்தததாக அவர் கூறினார். இந்த முறைமை மிகவும் சிறப்பாக உள்ளது. நோயாளிகளின் சுமை பெரிதும் குறைந்துள்ளது என்றும் அவர் கருதிகிறார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040