• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-13 16:36:57    
வாருங்கள் செல்வோம் ஷாவோலின்

cri
வி:ஷாவோலின் கோயில்-உடலும் உள்ளமும் உரமுடன் இருந்தால் இறைவனை நோக்கி இடையூறின்றி தியானம் செய்யலாம் என்பதை எடுத்துக்காட்டும் சின்னம் குங்பூ என்னும் போர்க்கலையின் பிறப்பிடம். வாருங்கள் நேயர்களே, போகலாம் ஷாவோலின் கோயில், 


ராஜா:மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தலைநகரான ஷெங்சோ நகரில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவில் சொங்ஷான் மலைச்சரிவுகளில் அமைந்திருக்கும் திருக்கோயில். பழைய புராணக்கதைகளின்படி, சொங்ஷான் மலைத் தொடரின் ஒரு பகுதியான ஷாவோ ஷி மலையின் வுரு சிகரத்தின் அடிவாரத்தில் சூலின்ஸி எனப்படும் மூங்கில் காட்டுக் கோயில் இருந்ததாம். அந்தக் கோயிலில் தாவோ ஜி என்ற பெயர் கொண்ட ஒரு முதியத்துறவி வசித்து வந்தாராம். அவர் மலைக்காடுகளில் சாகாமல் இருக்க உதவும் மந்திர மருந்தைத் தேடித் திரிந்தார். அவரிடம் தாவோ லான் என்னும் 10 வயதுச் சிறுவன் ஒருவன் சீடனாக இருந்தான். விறகு பொறுக்குவதற்காகத் தினமும் மலைக்குப் போகும் அவனுக்கு ஜின்செங் குழந்தை என்றழைக்கப்படும் ஒரு சிறுவனின் நட்புக்கிடைத்தது. இதை அறிந்த முதியத்துறவி, ஜின் செங் சிறுவனிடம் அதிசய மருந்து இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டார். தான் தேடித்திரியும் ஆயுளை நீட்டிக்கும் மருந்தின் மறு அவதாரமாக இந்தச் சிறுவன் இருக்கலாம் என நினைத்தார். அந்த ஜின் செங் 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முளைக்குமாம். அது வளர்ந்து பழம் தருவதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்.


ஒரு நாள் காலையில் தாவோ லானை பின் தொடர்ந்த அந்தத்துறவி. ஒரு பெரிய பாறையின் பின்னால் ஒளிந்து கொண்டு கண்காணித்தார். தாவோ லானும், ஜின் செங் குழந்தையும் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரெனப் பாய்ந்து ஜின் செங் குழந்தையைப் பிடித்தார். ஆனால் அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓடிவிட்டான். அந்த இடத்தில் தோண்டிய போது, வெள்ளை நிற வேர் ஒன்று கிடைத்தது. அதைக் கொண்டு வந்து மடத்தில் ஒரு தண்ணீர் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வைத்தார். கோயில் முழுவதும் நறுமணம் வீசியது. அப்போது யாரோ வரவே துறவி வெளியே வந்தார். அதற்குள் 10 சீடர்கள் அந்த ஜின்செங் மருந்துக் கசாயத்தைத் திருட்டுத் தனமாகக் குடித்து விட்டனர். கொஞ்சமே மீதி இருந்தது. கோபம் கோபம் கொண்ட துறவி சபித்துக் கொண்டே மீதியுள்ள கசாயத்தைக் குடிக்க முற்பட்டார். அப்போது தாவோ லான் சிறுவன் அதைத் தட்டிப்பறித்துக் கொண்டு ஓடினான். அந்த மருந்து எல்லாமே சிந்தி விட்டது. உடனே பெரிய ஒலி கேட்டது. பொன்னிறமாக ஒளிர்ந்த கோயில் அப்படியே வானில் உயரப்பறந்தது. கசாயம் குடித்த 10 சீடர்களும் தேவதைகளானார்கள். கிழட்டுத் துறவியோ அந்தரத்தில் தொங்கினார். மாயமாய் மறைந்து விட்ட அந்தக் கோயிலின் நினைவாக அதே இடத்தில் புதிய கோயில் ஒன்றை மக்கள் கட்டினார்கள். அதுதான் இப்போதுள்ள ஷாவோ லின் கோயில். ஷாவோ மலைக்காட்டுக்கோயில் என்று இதற்குப் பொருள் லின் என்றால் காடு என்று அர்த்தம்.


வி:ஜெங்ஷோ நகரில் இருந்து ஷாவோலின் கோயிலுக்குச் செல்லும் வழியில், Deng Feng என்றொரு சிறு நகரம். அங்கிருந்து கோயிலை நோக்கிச் செல்லும் 18 கிலோமீட்டர் பாதை நெடுகிலும் சிறியதும் பெரியதுமாக 83 வூ ஷு பள்ளிகள் குங் பூஃ கலையைக் கற்பிக்கின்றன. அந்தப் பள்ளியின் மாணவர்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்று ஆரவாரமாக வரவேற்கின்றனர்.