• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 10:41:19    
விவாக ரத்து 8

cri

சுவாங் மு சான் வெள்ளி டாலர்களை எண்ணிக் கொண்டிருந்தான். எண்ணப்படாமல் இருந்த குவியலில் இருந்து சிறிது பணம் எடுத்து, கிழட்டுப் பிசாசிடம் வெய் கொடுத்தார். சிவப்பு மற்றும் பச்சை சர்ட்டிபிகேட்டுகளை பரிமாறிக் கொண்டார்.

"இதை அங்கிட்டு வையுங்க. பணம் சரியா இருக்கான்னு பாரு மு சான் இது ஒண்ணும் வேடிக்கை இல்லே. எல்லாம் வெள்ளி..."

"அச் சூ."

ஏழாவது முதலாளிதான் தும்மல் போடுகிறார் என்று அய்குவுக்குத் தெரியும் ஆனாலும் அவரைத் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய வாய் விரியத் திறந்திருந்தது. மூக்கு விடைத்துக் கொண்டிருந்தது. இரண்டு விரல்களுக்கு இடையில் எதையோ பிடித்தபடி, "பழைய காலத்தில் முன்னோர்களை புதைக்கிறதுக்கு இதை பயன்படுத்துனாங்க" என்றார். அதைப் பிடித்தபடியே தமது மூக்கில் தேய்த்தார்.

கஷ்டப்பட்டு சுவாங் எண்ணி முடித்தான். இரு தரப்பினரும் சிவப்பு பச்சை சர்ட்டிபிகேட்டுகளை அப்பால் வைத்தனர். பதற்றம் தணிந்தது. நேயம் முழுமையாக நிலவியது.

"நல்லது, இந்த விஷயம் நல்லபடியா தீர்க்கப்பட்டது" என்று வெய் கூறினார். அவர்கள் அனைவரும் புறப்படப் போவது போல் தெரிந்ததும் அவர் நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்.

"சரி, இனி செய்ய வேண்டியது எதுவும் இல்லே. ஒரு முடிச்சு அவிழ்ந்தது. நல்லகாரியம். என்ன புறப்பட்டுட்டீங்களா? நல்ல நாளும் பொழுதுமா வந்திருக்கீங்க. இருந்து புத்தாண்டு விருந்து சாப்பிடலாமோ!"

"நாங்க இருக்க முடியாது அடுத்த வருசம் வந்து உங்கறோட உட்கார்ந்து குடிக்கிறோம்" என்று கூறினாள் அய்கு.

"நல்லது, வெய், இப்போ நாங்க குடிக்க மாட்டோம். வேற வேலை இருக்கு" சுவாங் மு சான், கிழட்டு மிருகம், சின்னப்பிசாசு எல்லோரும் மரியாதையாக புறப்பட்டுப் போனார்கள்.

"என்ன? ஒரு துளியாவது குடிச்சிட்டுப் போங்களேன்" அய்குவைப் பார்த்து வெய் சொன்னார்.

"நிஜமாவே, எங்களால முடியாது, வெய்... ரொம்ப ரொம்ப நன்றி."