• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-15 09:21:30    
"உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்"
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு நாகப்பட்டினம் எஸ் சாம்பசிவம் எழுதிய கட்டுரை.

cri

சீன இந்திய நட்புறவுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய முடியும்.

முன்னுரை

"உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்"

தேமதுர தமிழோசை உலகெலாம் பரவும் வகையில் ஒவ்வொரு தமிழ் ஆர்வலரும் அன்னைத்தமிழின் அற்புத படைப்புக்களை உலகெலாம் உறைந்துள்ள தமிழ் நெஞ்சங்கள் உய்த்துணரும் வகையில் சீன வானொலியின் துணை கொண்டு பரவும் வகை செய்திடல் வேண்டும். இவ்வாறான நட்புறவு வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய முடியும். நான் எனது பங்களிப்பை எவ்வகையில் இவ்வுறவுக்கு பாலமாக்க முடியும் என்ற எனது சிந்தனையில் தெளிந்த சில கருத்துக்களை இந்த சிறு கட்டுரைவாயிலாக தெளிவுபடுத்த விழைகின்றேன்.

இந்திய சீன நட்புறவு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. வரலாற்றின் ஆரம்பகாலக் கடடங்களில் மனிதன் தோன்றிய காலத்திலேயே காணப்பட்டது. மொழிக்கு ஒரு வெளிப்படுத்தும் கருவியாகிய எழுத்து வடிவங்களை கண்டறியும் சீன மக்கள் மகத்துவம் பெற்றுள்ளனர். இந்திய சீன உறவினை வணிக நிமித்தமாக சீனத்தின் பட்டு இந்தியாவில் பழங்காலத் தொட்டே புகழ் பெற்று விளங்கி வந்துள்ளது. சீன யாத்ரீகர்களான யுவான் சுவாங் பாகியான் இட்சிங் முதலானோர் பல்வேறு காலகட்டங்களின் இந்தியாவுக்கு வருகை தந்து தங்களது பயணக் குறிப்பு நூல்களில் இந்தியாவின் வளமை, ஆட்சி முறை, நாட்டு நிலமை முதலானவை பற்றியும் அரிய பெரும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்திய வரலாற்றினை ஒருங்கிணைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். இவ்வாறான பயண நிமித்தமாக இந்தியாவுக்கு சீனத்து யாத்ரீகர்கள் வந்து செல்வதென்பது இரு நாடுகளுக்கிடையே விரவி நின்ற உலகளாவிய நட்புறவையே வெளிப்படுத்துகின்றது.

நான் என்ன செய்ய வேண்டும்.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற கூற்றினை மெய்ப்பித்திட நாம் எல்லைகளைக் கடந்த நட்புறவினை வளர்த்துக் கொள்ள வழிவகைகளை கண்டறிந்து நமது சீன வானொலியின் துணைகொண்டு உறவுப் பாலத்தை அன்பு பாலமாக அமைத்திட பாடுபடுவோம். அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாதல்லவா?எனவே சீன மொழியை இந்தியாவிலும் தமிழ் மொழியை சீனாவிலும் சீன வானொலியின் துணை கொண்டு பரப்ப உறுதி பூணுதல் வேண்டும். சீன இந்திய நட்புறவு பலப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நாம் ஒன்று சேர்ந்து இதனை இதனால் முடித்திட வேண்டும் என்ற எண்ணத்தை தீவிரப்படுத்தி அதற்கான நமது உழைப்பை இலட்சிய பாதையை நோக்கி சீரிய முறையில் செயல்படுத்தி னேமேயானால் நமது அகராதியில் 'முடியாது', 'தெரியாது','கிடையாது', 'இல்லை' முதலான எதிர்மறையான வார்த்தைகள் அர்த்தமற்றதாகி விடுமன்றோ?முதற்கட்டமாக நாம் செய்ய வேண்டியது மொழிப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். சீன மொழியை உலகளாவிய தமிழ் ஆர்வலர்கள் அதிக அளவில் தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள ஏதுவாக சீன வானொலி நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இணைத்து அடிப்படை சீன மொழிக் கல்வியை பயிற்றுவிக்க ஆவண செய்ய வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் சீன மொழி பயிற்சி வகுப்புகளை தினசரி காலை 15 நிமிடங்கள் நடத்திடவும், இதனையே அன்றைய தேதியின் மாலை இரவு நிகழ்ச்சியன் போது மறு ஒலிபரப்பாகவும் ஒலிபரப்ப ஆவண செய்ய வேண்டும்.

இதே ரீதியில் தமிழ் மொழியினை சீன மக்கள் புரிந்து அறிந்து இன்புறும் வகையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். இத்தகைய அறிமுகப்பயற்சிகளை விரிவுபடுத்தி விட்டோமானால் இதன் தாக்கம் பல்கி பெருகி சீன இந்திய நட்புறவுக்கு அடித்தளம் அமைத்த பெருமை சீன வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு கிடைக்கும் முதல் வெற்றியென்று கொண்டாட தலைப்படுவோம்.

நான் என்ன செய்ய முடியும்

சீன இந்திய நட்புறவில் நானும் அங்கமாக அங்கத்தினராக இருக்க சீன வானொலியின் துணையுடன் என்னால் இயன்ற வகையில் சீன வானொலியின் வழிகாட்டுதலுக்கிணங்க செயல்படுவேன். தமிழ் மொழியின் பெருமைகளையும் சொற்சுவை பொருட்சுவை முதலானவற்றின் விபரங்களை எனக்கு தெரிந்த வகையில் எனது சக தோழர்கள் தோழியர்கள் சீன உடன் பிறப்புக்களுக்கு தெரிவிக்க சீன வானொலி துணை கொண்டு முயல்வேன். இதற்கு சீன வானொலியே வழிகாட்டியாக செயல்பட வேண்டும் எனவும் விழைகின்றேன்.

முடிவுரை

சீன இந்திய நட்புறவு என்பது தோன்றி மறையும் நீர்க்குமிழியன்று. இதன் பரந்த உறவு நிலை மொழி, இனம், நாடு, தூரம் கடந்த ஒன்றிய நிலையினை அடைய நம்மால் இயன்ற பெருமுயற்சிகளை சீன வானொலி மூலமாக செயல்பட்டால் அந்த உன்னத நிலை தமிழ் மொழியின் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அன்பால் பண்பால் பாசத்தால் உயர்ந்து நிற்போம். அந்த வைரவரிகளை இங்கே குறிப்பிடுவதில் பெருமையடைகின்றேன்.

"யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்.

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

இவ்வாறான ஒரு ஒருமித்த நிலையை சீன இந்திய உறவில் சீன வானொலி ஒரு பெரும் மாற்றத்தையும் உறவின் இயல்பு நிலையையும் வளர்க்கும் என நம்புகின்றோம்.

வாழ்க வளமுடன்.