• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-15 15:21:19    
உலக கோடீசுவரர்கள்

cri

அமெரிக்காவில் வெளிவரும் போர்பஸ் என்ற பிரபல பொருளியல் இதழ், 2007ஆம் ஆண்டுக்கான உலக கோடீசுவரர்கள் பட்டியலை மார்ச் 8ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மைக்ரோ சாஃப்ட் குழுமத்தின் தலைவர் பில் கேட்ஸ், 5600 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன், தொடர்ந்து 13வது ஆண்டாக, உலகின் முதல் கோடீசுவரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பங்குச் சந்தை தெய்வன் என்று போற்றப்பட்ட முதலீட்டு வல்லுநரான அமெரிக்காவின் வாரன் பஃபெட் 2ஆம் இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு, 5200 கோடி அமெரிக்க டாலர்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்புத் துறை முதல்வர் காலொஸ் ஸ்லீம் 3ஆம் இடம் வகித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு, 4900 கோடி அமெரிக்க டாலர்.

இந்தியாவின் இரம்புருக்கு மன்னன் லட்சுமி மிட்டல், கோடீசுவரர் பட்டியலில் 5ஆம் இடம் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு, 3200 கோடி அமரிக்க டாலர். ஆசியாவின் முதல் கோடீசுவரர் என்ற பெருமை, அவரையே சாரும். சீன ஹங்காஙைச் சேர்ந்த லீ ஜா செங் எனபவர் 2300 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகில் 9ஆம் இடத்தையும் ஆசியாவில் 2ஆம் இடத்தையும் வகித்துள்ளார்.

இவ்வாண்டு, சீனப் பெருநிலப் பகுதியைச் சேர்ந்த 20 பேர் கோடீசுவரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஹங்காங்கைச் சேர்ந்த 21 பேரும் தைவான் பிரதேசத்தைச் சேர்ந்த 8 பேரும் இப்பட்டியலில் நுழைந்துள்ளனர்.

உலக கோடீசுவரர் பட்டியலில் இந்திய நாட்டவர் 36 பேர் இடம் பிடித்துப் புதிய சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு, 19100 கோடி அமெரிக்க டாலர். ஆசிய கண்டத்தில் அதிகக் கோடீசுவரர்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்தப் பெருமையைத் தக்க வைத்து வந்த ஜப்பானை இந்தியா விஞ்சுவது இதுவே முதல் முறையாகும்.

ரஷியாவைச் சேர்ந்த 53பேர்,கோடீசுவரர் பட்டியலில் நுழைந்துள்ளனர்.மொத்தம் 2820கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடைய இவர்களின் சராசரி வயது 46. ஜெர்மனியைத் தாண்டிய ரஷியா உலக கோடீசுவரர் எண்ணிக்கையில் 3ஆம் இடம் பெற்றிருப்பது அறியத் தக்கது.

100 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைத் தாண்டிய கோடீசுவரர்கள் தான் இந்தப் போர்பஸ் பட்டியலில் சேர்க்கப்படுவர். இதன் படி, நடப்பு ஆண்டு கோடீசுவரர்களின் எண்ணிக்கை 946 ஆக அதிகரித்துள்ளது.