சீனாவின் நகரங்களில் நிலையான சொத்துக்களுக்கான மூதலீடு
cri
இவ்வாண்டின் முதல் இரண்டு திங்களில், சீனாவின் நகரங்களில் நிலையான சொத்துக்களுக்கான மொத்த மூதலீட்டுத் தொகை, 65 ஆயிரத்து 350 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 23.4 விழுக்காடு அதிகம். ஆனால், அதிகரிப்பு வேகம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.2 விழுக்காடு குறைந்தது. சீனத் தேசிய புள்ளி விவர அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை இதைக் காட்டுகின்றது. முதலீடு அளவுக்கு மீறி அதிகரிப்பது, தற்போது, சீனப் பொருளாதாரத்தில் மிக முனைப்பான பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பது, ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டில் மிக முக்கிய பணியாகும். முதலீடு அளவுக்கு மீறி அதிகரிக்கும் போக்கினைத் தடுக்கும் பொருட்டு, கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதல், கடன்களுக்கான வட்டித்தொகையை உயர்த்துவது, புதிதாக இயங்கும் திட்டப்பணிகளைச் சரிப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனாவின் தொடர்புடைய வாரியம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை திங்கள் முதல், சீனாவில் முதலீட்டின் அதிகரிப்பு வேகம் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.
|
|